170 ரன்.. பலமான இங்கிலாந்து பெண்கள் அணி.. அயர்லாந்தின் ஒரே வீராங்கனை வீழ்த்தினார்.. அபார வெற்றி

0
1252
Orla Prendergast

தற்போது இங்கிலாந்து பெண்கள் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து பெண்கள் அணியை அயர்லாந்து பெண்கள் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது உலக பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வழக்கம்போல் உச்சத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்து பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்த இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சவாலான இலக்கை கொடுத்த இங்கிலாந்து

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பெண்கள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து பெண்கள் அணியின் துவக்க வீராங்கனைகள் பிரயோனி ஸ்மித் 26 பந்தில் 28 ரன்கள், டாமி பிமோன்ட் 34 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். மூன்றாவது இடத்தில் வந்த செரன் ஸ்மாலே 10 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து பெண்கள் அணியின் மிடில் வரிசையில் பேஜ் ஸ்காபீல்ட் 21 பந்தில் 34 ரன்கள், ஜார்ஜியா ஆடம் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி சவாலான ஸ்கோரை நிர்ணயிக்க உதவி செய்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சில் ஒர்லா ப்ரெண்டேர்கஸ்ட் 4 ஓவர்களுக்கு 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிலா. ஆர்லின் கெல்லி 4 ஓவர்களுக்கு 22 ரன் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பேட்டிங்கிலும் கலக்கிய ஒர்லா ப்ரெண்டேர்கஸ்ட்

இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து பெண்கள் அணிக்கு கேப்டன் கேபி லீவிஸ் 35 பந்தில் 38 ரன்கள், லீ பால் 27 பந்தில் 27* ரன் எடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் நடுவில் பேட்டிங் செய்ய வந்த பந்துவீச்சில் கலக்கிய ஒர்லா ப்ரெண்டேர்கஸ்ட் பேட்டிங்கிலும் அசத்தினார். இவரது சிறப்பான பேட்டிங் காரணமாக 19.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அயர்லாந்து அணி பலமான இங்கிலாந்து பெண்கள் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிங்க : 4,4,4,4,4.. மாஸ் காட்டிய பாபர் அசாம்.. ஆனா 105 ரன்னில் சுருட்டிய ரிஸ்வான் அணி.. 9 ஒற்றை இலக்க பரிதாபம்

ஒர்லா ப்ரெண்டேர்கஸ்ட் மொத்தம் 51 பந்துகளை சந்தித்து அதில் 13 பவுண்டரிகள் உடன் 80 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். தனி ஒரு வீராங்கனையாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டு பலம் வாய்ந்த இங்கிலாந்து பெண்கள் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகி விருதையும் வென்றார்!

- Advertisement -