ஒருமுறை கூட ஃபேர் பிளே விருது வாங்காத 5 ஐபிஎல் அணிகள்

0
143
RCB and KKR

ஐபிஎல் தொடரின் முடிவில் பல்வேறு அவார்டுகள் வழங்கப்படும். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருக்கு பர்ப்பில் கேப், அதேபோல தொடரில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரருக்கு எமர்ஜிங் பிளேயர் ஆப் த சீரியஸ் என பல்வேறு விருதுகள் வழங்கப்படும். அதில் ஒரு விருது ஃபேர் பிளே விருது ஆகும்.

தொடரில் மிக சிறப்பாக அறநெறியை கடைபிடித்து சக அணி வீரர்களையும் அம்ப்பயர்களையும் அனைவரையும் சமமாக பார்த்து நல்ல விதமாக பங்களித்த அணியை தேர்வு செய்து அந்த விருது கொடுக்கப்படும். தொடர் ஆரம்பிக்கப்படும் போது இந்த புள்ளி பட்டியலும் ஆரம்பமாகிவிடும். ஒரு போட்டி முடிந்த பின்னரும் அந்த போட்டியில் அணிகள் பங்கேற்கும் மற்றும் நடந்து கொள்ளும் விதம் பொருத்து புள்ளிகள் கொடுக்கப்படும். தொடர் முடிவில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறது அந்த அணிக்கு ஃபேர் பிளே விருது கொடுக்கப்படும்.

- Advertisement -

இதுவரையில் நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட ஃபேர் பிளே விருது வாங்காத அணிகளை பற்றி பார்ப்போம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டது. அதிரடியான அணியை கொண்ட அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற இயலவில்லை.

கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும், நல்ல அற நெறியுடன் விளையாடியதற்கு ஒரு முறையாவது ஃபேர் பிளே அவார்டு வாங்கி இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் அந்த அணியை வாங்கியது இல்லை. 13 ஐபிஎல் தொடர்களில் பங்கெடுத்துள்ளார் அணி இதுவரை ஒருமுறை கூட அந்த விருது வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் லீக் தொடர் ஆரம்பித்த முதல் ஆண்டில் இருந்து அதனுடைய 12 ஆவது ஆண்டு வரை ஒரு முறை கூட டெல்லி அணியால் இறுதிப் போட்டி வரை செல்ல முடியவில்லை. ஆனால் கடந்த ஆண்டுதான் முதல் முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இருப்பினும் இறுதி போட்டியில் ஜாம்பவான் அணியான மும்பை அணியிடம் தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியும் பெங்களூர் அணியை போலவே அது விளையாடிய 13 லீக் தொடர்களில் ஒரு முறை கூட ஃபேர் பிளே விருது வாங்கியதில்லை.

டெக்கான் சார்ஜர்ஸ்

ஐபிஎல் லீக் தொடரில் 2008 முதல் 2012 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி விளையாடியது. அதன் பின்னர் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாக உருவெடுத்தது. 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மொத்தமாக ஐந்து ஆண்டுகள் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009 ஆம் ஆண்டு ஒரு முறை கோப்பையை கைப்பற்றியது.

கில்கிருஸ்ட் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்டு அந்த அணி 2009ஆம் ஆண்டு தொடரை கைப்பற்றியது. ஒருமுறை தொடரை கைப்பற்ற இருந்தாலும் இந்த அணியால் 5 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஃபேர் பிளே விருது வாங்க முடியவில்லை.

புனே வாரியர்ஸ் இந்தியா

2011ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை இந்த அணி விளையாடியது அனைவருக்கும் தெரியும். இந்த அணியில் நல்ல திறமை வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்த போதிலும், இந்த அணையால் ஒருமுறைகூட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

சௌரவ் கங்குலி, கிளார்க், உத்தப்பா, யுவராஜ் சிங், ஸ்டீவன் ஸ்மித், தமிம் இக்பால், ஜெஸி ரைடர் போன்ற பல அதிரடி ஆட்டக்காரர்கள் அணியில் இருந்த பொழுதிலும் இந்த அணி ஒவ்வொரு முறையும் கடைசி இரண்டு இடத்திலேயே தொடரை முடித்துக் கொள்ளும். அவ்வளவு சிறப்பாக ஆட முடியாத இந்த அணியால் ஒருமுறை கூட ஃபேர் பிளே விருது வாங்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் தொடரை கைப்பற்றி அணிதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கௌதம் கம்பீர் தலைமையில் மிக சிறப்பாக அந்த இரண்டு ஆண்டுகள் விளையாடி தொடரை கச்சிதமாக கைப்பற்றியது. அதற்குப் பின்னர் அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அந்த அணியால் 2014க்கு பின்னர் ஒரு தொடரில் கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை

இரண்டு முறை கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணியால் ஒரு முறை கூட ஃபேர் பிளே விருது வாங்க முடியவில்லை என்பது சோகமான செய்தி ஆகும்.