இந்த அவமானம் தேவையா? பிசிசிஐ க்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபிஎல் அணிகள்

0
614

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் என முக்கியமான தொடர்கள் நடைபெறுவதால் பிசிசிஐ அண்மையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வீரர்கள் காயம் அடைவதை தடுக்க ஐபில் போட்டிகளில் சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்த வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது. மேலும் வீரர்கள் காயம் அடைவது போல் தெரிந்தால் அவர்கள் ஐபிஎல் போட்டிகள் என்று விலகி விட வேண்டும் என பிசிசிஐ கூறி இருந்தது.

- Advertisement -

வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்க தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் ஐபிஎல் அணிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் பிசிசிஐ கூறி இருந்தது. பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தில், எந்த வீரர்களை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக்கூடாது என்று பிசிசிஐ யை ஐபிஎல் அணிகளை கட்டுப்படுத்த முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் வீரர்கள் மீது அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து இருப்பதால் வீரர்களை விளையாட வைக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ள ஐபிஎல் அணிகள், வீரர்களை கண்காணிக்க வேண்டுமானால் பிசிசிஐக்கு அதிகாரம் இருப்பதாகவும் எங்களுடைய கொள்கை முடிவு கட்டுப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் திருப்பி அடித்துள்ளனர். வீரர்கள் தேர்வு அணி நிர்வாகிகளுக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் ஐபிஎல் அணிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் வீரர்களின் உடல் தகுதி முக்கியம் என்பதை நாங்கள் உணர்வதாகவும் ஆனால் அதனை ஏலத்திற்கு முன்பே பிசிசிஐ தெரிவித்து இருந்தால் தாங்கள் மாற்று ஏற்பாடுகள் செய்திருப்போம் என்றும் ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பிசிசிஐ இந்த அறிவுறுத்தல் ஐபிஎல் அணிகள் இடையே எடுபடவில்லை. இதனால் வீரர்கள் உடல் தகுதி உறுதி செய்ய பிசிசிஐ என்ன செய்யப் போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -