பாகிஸ்தான் வம்சாவளியை # சார்ந்த இந்த வீரருக்கு ஐபிஎல் இல் வாய்ப்பு தரலாம் – ப்ரெண்டன் மெக்கல்லம்

0
483
mccullum rehan ahmed

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளது இங்கிலாந்து அணி . இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் மூன்று சதங்களை அடித்து ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார் ஹாரி ப்ரூக்ஸ்.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த ரெகான் அஹமத் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றினார் .

இளம் வீரர்களின் எழுச்சியால் இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி புதிய உத்வேகம் பெற்றுள்ளது . பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் புதிய எழுச்சியை பெற்றுள்ளது இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்திய பாஸ்பால் முறையில் அந்த அணி புதிய எழுச்சியை கண்டுள்ளது ..

- Advertisement -

இந்தத் தோல்வியானது பாகிஸ்தான் அணி அவர்களது சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பிரண்டன் மெக்கல்லம் பேட்டி அளித்தார் . அதில் அவர் இங்கிலாந்து அணியின் வெற்றியை சிறப்பாக பாராட்டியதோடு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் முயற்சிக்கலாம் என்று கூறினார் .

இது குறித்த அவர் பேசுகையில் “இங்கிலாந்து அணிக்கு அறிமுகமான பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த ரெகான் அகமது ஐபிஎல் விளையாட தகுதியான ஒரு வீரர் என்று கூறியிருக்கிறார் . இது குறித்து அவர் பேசுகையில் நான் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஐபிஎல் அணிக்கு பயிற்சி அளித்துள்ளேன்.என்னுடைய அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன் ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியின் நிச்சயமாக எடுக்க வேண்டும் அவரிடம் ஒரு டி20 போட்டி விளையாடுவதற்கு தேவையான எல்லா பந்து வீச்சு நுணுக்கங்களும் உள்ளன” என்று கூறினார் .

மேலும் இதைப்பற்றி தொடர்ந்து பேசுகையில் “அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது அந்த வீரர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் . உலகில் உள்ள எல்லா தலைசிறந்த வீரர்களுடனும் விளையாடும் போது அதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது லெக் ஸ்பின்னர்கள் என்றுமே டி20 கிரிக்கெட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் அதனால் ரெகான் அஹமதுவை நிச்சயமாக ஏதேனும் ஒரு அணியில் தேர்ந்தெடுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -