ஐபிஎல் மினி ஏலம் ; தேதி இடம் வீரர்கள் வரிசை அறிவிப்பு!

0
1040
IPL

2023ம் ஆண்டிற்கான ஐபில் தொடர் வருகிற மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கிறது உலக கிரிக்கெட்டின் மிக பெரிய திருவிழாவான ஐபில் உலகின் மிக பிரமாண்டமான லீக் கிரிக்கெட்டாக பார்க்கப்படுகிறது இது உலகெங்கிலும் இருந்து தலை சிறந்த வீரர்களும் பயிற்சியாளர்களும் இதில் பங்கெடுத்து விளையாடுவார்கள்.

இந்த ஐபில் தொடரில் விளையாடும் வீரர்கள் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள் இதற்கான ஏலம் ஐபில் போட்டி தொடருக்கு முன்பாக நடத்தப்படும் உலகின் மிக பெரிய பரிசு தொகை கொண்ட கிரிக்கெட் லீக் இது என்பதால் உலகின் எல்லா முன்னணி வீரர்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவார்கள்.

அடுத்த ஐபில் தொடருக்கான மினி ஏலம் வருகின்ற 23ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற இருக்கிறது.சென்ற வருடம் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் இந்த வருடம் மினி ஏலமாக நடைபெறுகிறது .

இந்த ஏலத்தில் உலகெங்கிலும் இருந்து 406 வீரர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறார்கள்.இதில் 273 பேர் இந்திய வீரர்கள்132 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.இவர்களில் 4 பேர் இணை நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த ஏலத்தின் மூலம் 87வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.19 வீரர்கள் தங்களின் அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயித்து உள்ளனர் 11 வீரர்கள் தங்களின் அடிப்படை விலையாக ஒன்றரை கோடி ரூபாயை நிர்ணயித்து உள்ளார்கள். மேலும் 20 வீரர்கள் தங்களின் அடிப்படை விலையாக ஒரு கோடி ரூபாயை நிர்ணயித்து உள்ளார்கள்.

இந்த லிஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஹாரி ப்ரூக்ஸ் டாம் பேண்டன் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் க்ரீன் மேற்கிந்திய தீவுகள் வீரர் நிகோல்ஸ் பூரன் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் முஜிபுர் ரஹ்மான் பங்களதேஷ் அணி வீரர் லிட்டான் தாஸ் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்றிச் க்ளாஸன், ரிலே ரூஸ்ஸோ ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது