ஐபிஎல் 2022 மினி ஏலம் ; முக்கிய விபரங்கள் உள்ளே!

0
431
sam curran

2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . இதில் மொத்தம் 45 சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள் . இந்த வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் மற்றும் சர்வதேச போட்டியில் ஆடாதவர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர் . இந்த ஏலத்தில் இதுவரை 37 வீரர்கள் அணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இன்னும் 49 இடங்கள் நிரப்ப வேண்டி உள்ளது. இன்றைய ஏலத்தில் மட்டும் 1,39,90.00,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஷாம் கரன் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரினை 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் மற்றும் அதிரடி ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியால் 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார் . மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனுமான நிக்கோலஸ் பூரன் 16 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி வாங்கியுள்ளது .

இவர்கள் தவிர தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்றிச் கிளாசன் 5.25 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. மேலும் மேற்கிந்தே தீவுகள் அணியின் ஆல் கவுண்டர் ஜேசன் ஹோல்டர் 5.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல் அணி வாங்கியுள்ளது. நடந்து முடிந்த t20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராஜா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார் . நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது .

இது தவிர இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடிவரும் பிலிப்ஸ் சால்ட் இரண்டு கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல் அணி வாங்கியுள்ளது . மேலும் t20 போட்டிகளில் சிறந்த லெக் ஸ்பின்னராக விளங்கி வரும் ஆதில் ரஷீத் இரண்டு கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது . சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் ஜெகதீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது .

எந்தெந்த அணி எவ்வளவு விலைக்கு வீரர்களை வாங்கி இருக்கிறது என்று பார்ப்போம் :
குஜராத் டைட்டன்ஸ் :
கேன் வில்லியம்சன் (2 கோடி )
ஓடியன் ஸ்மித் (50 லட்சம் )
கேஎஸ்.பரத் (1.2 கோடி )
சிவம் மாவி (6 கோடி )

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி :
ஹாரி ப்ரூக்ஸ் (13.25 கோடி )
மாயன் அகர்வால் (8.25 கோடி )
என்ரிச் கிளாசன் (5.25 கோடி )
ஆதில் ரஷீத் (2 கோடி )
மாயன் மார்க்கண்டே (50 லட்சம் )
விவ்ரந்த் ஷர்மா(2.6 கோடி )
சமர்த் வியாஸ் (20, லட்சம் )
சன்வீர் சிங் (20, லட்சம் )
உபேந்திர யாதவ் (25 லட்சம் )

சென்னை சூப்பர் கிங்ஸ் :
அஜிங்கியா ரகானே (50, லட்சம் )
பெண் ஸ்டோக்ஸ் (16.25 கோடி )
ஷேக் ரஷீத் (20 லட்சம் )
நிஷாந்த் சிந்து (60 லட்சம் )
கைல் ஜெமிசன்(1 கோடி )
அஜய் ஜதாவ்(20, லட்சம் )

பஞ்சாப் கிங்ஸ் :
சாம் கரண்(18.5 கோடி )
சிக்கந்தர் ராசா(50, லட்சம் )

ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஜேசன் ஹோல்டர் (5.75 கோடி )
கமல் சிங் (20, லட்சம் )

மும்பை இந்தியன்ஸ் :
கேமரூன் கிரீன் (17.5 கோடி )
ஜய் ரிச்சர்ட்சன்(1.5 கோடி )

லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ்:
நிக்கோலஸ் பூரன் (16 கோடி )
ஜெய்தேவ் உனத்கட்(50, லட்சம் )
யாஸ் தாக்கூர்(45 லட்சம் )
ரோமாரியோ செப்பேட்(50 லட்சம் )
டேனியல் சம்ஸ்(75 லட்சம் )