கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இங்கு ஐபிஎல் நடக்க; இங்கிலாந்தில் சதம் அடித்து அசத்தியிருக்கும் புஜாரா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மாதம் ஆறாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது!

- Advertisement -

தற்பொழுது இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்க, இந்திய அணியில் டெஸ்ட் இடம் பிடித்து விளையாடி வரும் செதேஸ்வர் புஜாரா இங்கிலாந்து டெஸ்ட் கவுண்டி போட்டிகளில் சசக்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் இந்த அணிக்கு கவுண்டிப் போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா கடந்த கவுண்டி சீசனில் எட்டு ஆட்டங்களில் 1094 ரண்களை 109.40 ஆவரேஜில் குவித்து பிரமிக்க வைத்தார். இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரான லண்டன் ராயல் கப் தொடரில் 624 ரன்கள் குவித்தார்.

இந்த ஆண்டு இங்கிலாந்து சென்று தனது முதல் கவுண்டி போட்டியை ஆரம்பித்த புஜாரா சதம் அடித்து அசத்தி இருக்கிறார். 163 பந்துகளை சந்தித்த அவர் 115 ரன்களை 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் எடுத்திருக்கிறார். சதத்தை 134 பந்துகளில் நிறைவு செய்து மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு இந்த முறை நடந்து வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் சிறப்பானதாக அமையவில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்திலும் நல்லவிதமான புள்ளி விபரங்களை கொண்டு இருப்பதால் இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைக் கொண்டு வர உறுதி செய்வார் என்று நம்பலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து பேசிய அவர் ” இந்தியா அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்வது எனது கனவாகும். நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது!” என்று பேசியிருக்கிறார்!

- Advertisement -
Published by