“பிளேயர்ஸ் சரியா ஆடலன்னா அவங்களை கேளுங்க.. ஐபிஎல் தான் பெஸ்ட்” – கடுமையாக பேட்டியளித்த கம்பீர்!

0
129

பிளேயர்ஸ் சரியாக விளையாடவில்லை என்றால், அது அவர்கள் தனிப்பட்ட திறன். இதற்காக ஐபிஎல்-ஐ குறை கூறக்கூடாது என்று கடுமையாக சாடியுள்ளார் கௌதம் கம்பீர்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகாமல், ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். நன்றாக விளையாடிய பணம் சம்பாதிப்பதற்காக இப்படி வீரர்கள் செய்கிறார்கள். ஐபிஎல் போட்டிகள் மட்டுமே முக்கியமில்லை சர்வதேச போட்டிகளும் முக்கியம் தான் என்று உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என சாடினர்.

இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர், ஐபிஎல் மிகச் சிறப்பானது என்று பெருமிதமாகவும் பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

“இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறப்பான விஷயம் ஐபிஎல். நான் இதை நல்ல மனநிலையுடன் தான் கூறுகிறேன். இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், உடனடியாக ஐபிஎல்-ஐ காரணம் காட்டுகின்றனர்.

- Advertisement -

அது அப்படியல்ல. ஐசிசி தொடர்களில் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அதற்கு முழு காரணம் அந்த வீரர் மட்டுமே. ஐபிஎல் ஒருபோதும் காரணமாக அமையாது. ஐபிஎல்-ஐ குறை கூறுவது முற்றிலும் முறையற்றது.

“இந்திய அணியில் இதற்கு முன்னர் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தான் இருந்திருக்கின்றனர். ஐபிஎல் வந்த பிறகு தான் இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறி இருக்கின்றனர். நாம் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

“மேலும் இளம் வீரர்களின் திறமைகள் பல வெளிப்பட்டிருக்கின்றன. ஐபிஎல் இல்லை என்றால் இது எப்படி சாத்தியமாகும்.”

“ஐபிஎல் போன்று வெவ்வேறு விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் வந்துவிட்டன. உதாரணமாக கபடி, பேட்மின்டன், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அதற்கென்று தனித்தனியே லீக் போட்டிகள் வந்து விட்டதால் பல இளம் வீரர்கள் மற்றும் சிறுவயதினர் அதை நோக்கி நகரத் துவங்கி விட்டனர். இதனால் இந்தியாவின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்கும்.”

“தற்போது இருக்கும் மொபைல் போன்கள் யுகத்தில் இது ஒரு மாறுபட்ட புரட்சி. ஆகையால் ஐபிஎல் அனைத்திற்கும் முன்னுதாரமாக இருக்கிறது. இதனை குறை சொல்வது முற்றிலும் அபத்தமானது. பிசிசிஐ எடுத்த மிகச்சிறந்த முன்னெடுப்பு இது.” என்று ஆணித்தனமாக கூறுவேன் என தனது பேட்டியில் தெரிவித்தார்.