ஏற்கனவே தோத்த சோகத்தில் இருக்கும் டு ப்ளெசிஸ்-க்கு 12 லட்சம் அபராதம் – அதிரடி முடிவெடுத்த ஐபிஎல் நிர்வாகம்!

0
219

குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை போட்டு முடிக்கவில்லை என்கிற காரணத்திற்காக டு-பிளசிஸ் க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எடுத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டம் 20 வது ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் பக்கம் திரும்பி ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

ஏற்கனவே போட்டியில் தோல்வி அடைந்த சோகத்தில் இருக்கும் ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு ப்ளெசிஸ்-க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம். இதுகுறித்து ஐபிஎல் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

“குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஓவர்கள் வரை தாமதமாக வீசினார்கள். இதனால் போட்டியிலிருந்து பாதி சம்பளம் அல்லது 12 லட்சம் இரண்டில் எது அதிகம் என்கிற விதிப்படி அபராதம் விதிக்கிறது. ஸ்லோவாக ஓவர்கள் வீசியதற்காக ஆர்சிபி அணிக்கு கொடுத்திருக்கும் முதல் வார்னிங்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு முறை இதே போல் ஸ்லோவாக 20 ஓவர்களை வீசி முடித்தால், குறிப்பிட்ட அணியின் கேப்டன் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் வெளியில் அமர்த்தப்படுவார்கள் என்பது ஐபிஎல் இன் விதிமுறையாகும்.

- Advertisement -

இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, ஒரு வெற்றி இரண்டு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.