இந்த இந்திய வீரருக்கு மட்டும்தான் ஐபிஎல் ஒரு மேட்டரே கிடையாது – தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேச்சு!]

0
263
DK

பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த பிறகு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று விளையாடிய இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் அணியைக் கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் கில் மற்றும் புஜாரா இருவரும் சதம் அடிக்க 513 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்திருக்கிறது!

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய சுவர் என்று கூறப்படும் புஜாரா ஆயிரம் நாட்களுக்கு மேல் கடந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் இருந்து வந்தார். முதல் இன்னிங்ஸில் சதத்தை அடிக்க நெருங்கி 90 ரன்கள் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அரை சதம் அடித்த பிறகு மிக வேகமாக விளையாடி சில ஆண்டு சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே பெரும்பாலும் கவனம் செலுத்தக்கூடியவர். ஐபிஎல் தொடரில் கடந்த முறை சென்னை அணி அவரை வாங்கி இருந்தது. இந்த முறை அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்தச் சமயத்தில் அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாட சசக்ஸ் அணிக்கு விளையாட சென்று சதங்களுக்கு மேல் சதங்களாகக் குவித்ததோடு, அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு கலக்கினார்.

தற்பொழுது புஜாரா பற்றி இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக சமீபத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” நியாமாகச் சொல்வதாக இருந்தால் அவருக்கு ஐபிஎல் விளையாட ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஐபிஎல் விளையாட ஒரு குறிப்பிட்ட காலம் வரை முயற்சி செய்தார். பின்பு இது தனக்கானது இல்லை என்று ஒதுங்கிக் கொண்டார். இதனால் அவர் இந்திய கோடை காலத்தில் நிறைய நேரம் செலவிட முடிகிறது. இந்த காலத்தில் இங்கிலாந்து சென்று தனது கிரிக்கெட் திறமையை மெருகேற்றி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார். இது அவரை நிரூபிக்க முயற்சி செய்வது கிடையாது, நாம் எந்த வடிவத்தில் விளையாடும் பொழுது மகிழ்ச்சி அடைகிறோம், எதில் நம்மை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது பற்றியது. இதற்கான பதில் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஐபிஎல் அவருக்கானது அல்ல!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அவர் கண்டறிந்துள்ள பதில் கோடை காலத்தில் இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாடுவது. மேலும் அந்தக் காலகட்டத்தில் அவர் தனது குடும்பத்தை இங்கிலாந்து அழைத்து சென்று குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறார். அவர் எது தனக்கு சரிவரும் என்று கண்டுபிடித்து விட்டார். இதில் தான் நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக முன்னேற்றம் அடைய வேண்டும். நீங்கள் உங்களால் வெல்ல முடியாத ஒரு போர் இருப்பதை புரிந்து கொண்டால் நீங்கள் வேறொரு போருக்கு செல்ல வேண்டும். அவர் மிகச் சரியாக அந்தப் பாதையில் சென்று விட்டார்” என்று பாராட்டி கூறியுள்ளார்!