ஹர்திக் வேண்டாம்.. ரோகித் சர்மாவை கேப்டனாக போடுங்க.. நீதா அம்பானியிடம் நேரில் கோரிக்கை வைத்த ரசிகர்

0
34

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் நியமிக்கப்பட்டார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த தொடரில் படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்று தற்போது ஏழாம் இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு அண்மையில் காயம் ஏற்பட்டதால், அவர் வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்து வருகிறார். பில்டிங் செய்யும் போது அவர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

ரன் அவுட்டால் வென்ற மும்பை:

இதன் காரணமாக மும்பை அணி பில்டிங் செய்யும் போது ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தடுமாற்றம் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா பவுலர்களை ரொட்டேட் செய்வதில் தவறு செய்வதாகப் புகார் இருந்துள்ளது. நேற்று கூட டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 17 வது ஓவரை பவுல்ட் வீசினார்.

இன்னும் இரண்டு ஓவர்களும் ஒரு ஓவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒவரும் என நான்கு ஓவர்கள் இருந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹர்திக் பாண்டியா மிட்செல் சாண்ட்னரை கடைசியில் பந்து வீச அழைத்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் சென்றது. எனினும் மும்பை அணி அதிர்ஷ்டவசமாக மூன்று ரன் அவுட்டுகளை செய்ததால் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஹர்திக் செய்த தவறு:

இல்லையென்றால் நேற்று டெல்லி அணி தான் வெற்றி பெற்றிருக்கும். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளரான கரண் சர்மாவை பயன்படுத்தும் படி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருந்தார். இதனால் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மும்பை அணியின் நேற்று நீதா அம்பானி கோயிலுக்கு சென்று திரும்பினார்.

இதை பாருங்க: ஐபிஎல் 2025.. வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. அழிவை நோக்கி செல்லும் சிஎஸ்கே.. விவரம்

அப்போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களையும் மீறி சென்று மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவையே நியமியுங்கள் ஹர்திக் பாண்டியா வேண்டாம் என்று கூறினார். இதை கேட்டவுடன் நீதா அம்பானி சிரித்துவிட்டு கையெடுத்து கும்பிட்டு சென்றார்.

- Advertisement -