ஐபிஎல் 2025.. வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. அழிவை நோக்கி செல்லும் சிஎஸ்கே.. விவரம்

0
8

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் எஞ்சி இருக்கும் எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியை பெற வேண்டும்.

ஆனால் அதற்கான அறிகுறிகள் கொஞ்சம் கூட தென்படாத நிலையில், சிஎஸ்கே அணி மிகப் பெரிய ஒரு சரிவை சந்திக்க போகிறது. ஏற்கனவே ருதுராஜ் காயம் காரணமாக அணியை விட்டு சென்ற நிலையில் தற்போது சிவம் துபேக்கும் காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை கவலை அடை செய்து இருக்கிறது.

- Advertisement -

சரிவை நோக்கி சிஎஸ்கே:

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மட்டும்தான் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை நிறைவு செய்தது கிடையாது. எட்டு அணிகள் இருந்த போதும் சரி, பத்து அணிகள் இருந்தபோதும் சரி சிஎஸ்கே அணி கடைசி இடத்தை பிடித்தது இல்லைம் ஒரே ஒரு முறை ஒன்பதாம் இடத்தை பிடித்திருந்தது.

மும்பை அணி கூட பத்தாவது இடத்தை நிறைவு செய்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு அந்த அவமானம் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி விளையாடும் விதத்தை பார்த்தால் பத்தாவது இடத்தை தான் பிடித்து நிறைவு செய்யும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பழைய பஞ்சாங்கத்தை பாடும் சிஎஸ்கே:

ஏனென்றால் சிஎஸ்கே அணியை தவிர மற்ற அணிகள் அனைவரும் பலமாக இருப்பதாகவும், அதிரடி காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒன்பதாம் இடத்தில் இருந்த மும்பை சிஎஸ்கேவுக்கு கீழ் இருந்த சன்ரைசர்ஸ் போன்ற அணிகள் கூட அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பதாகவும் ஆனால் சிஎஸ்கே இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கருண் நாயர் உறுதியா இந்தியா டீம்ல இருப்பார்.. கம்பீர் விடமாட்டார் காரணம் இதுதான் – அம்பதி ராயுடு நம்பிக்கை

சி எஸ் கே அணி காலத்திற்கு ஏற்ப மாறாததால் இம்முறை பத்தாவது இடத்தையே பிடிக்க நேரிடும் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதலில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் பின் பிளே ஆப் சுற்றிற்காவது செல்ல வேண்டும் என தங்களது மனதை மாற்றிக்கொண்டனர். ஆனால் சிஎஸ்கே அணி விளையாடும் விதத்தைப் பார்த்தால் பத்தாவது இடத்தில் பிடிக்காமல் தவித்தாலே போதும் என்ற சோகமான நிலை வந்து விட்டது.

- Advertisement -