ஐபிஎல் தொடரில் மோசடி? வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது வன்மத்தை கக்கிய அஸ்வின்..! என்ன நடந்தது?

0
679

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் ஒரு புரியாத புதிர் நடைபெறுவதாக ரசிகர்களை குற்றம் சாட்டியுள்ளனர்.

பயிற்சியாளர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த நாட்டு வீரர்களை அதிகளவு ஏலம் மூலம் எடுப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள அஸ்வின் ஐபிஎல் மினி ஏலம் என்பது பணத்தை போட்டவர்களும் அணி நிர்வாகிகளும் என பல பேர் அமர்ந்து எந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

- Advertisement -

அப்படி இருக்கும் பட்சத்தில் இதையெல்லாம் தாண்டி பயிற்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஒரே நாட்டு வீரர்களாக பார்த்து ஏலத்தில் அதிக அளவு எடுக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக எட்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம் என்று இருக்கிறது.

ஆனால் பிளேயிங் லெவனின் நான்கு வீரர்கள் தான் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விளையாட முடியும். இப்படி இருக்க எதற்காக மேலும் ஒரு நான்கு வெளிநாட்டு வீரர்களை அணியில் எடுக்க வேண்டும்.இது இந்தியன் பிரீமியர் லீக் தானே அப்போது ஏன் அதிக அளவில் வெளிநாட்டு வீரர்களை நீங்கள் எடுக்கிறீர்கள் என்று அஸ்வின் கேள்வி கேட்டுள்ளார்.

நீங்கள் அதிகமாக வெளிநாட்டு வீரர்களை எடுத்தால் அவர்கள் இந்திய ஆடுகளங்கள் குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் தேவைக்கேற்ப அதிக தகவல்களை எடுத்துக்கொண்டு அதை இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள் என்றும் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

இதனை சமாளிக்க இனி நான்கு வெளிநாட்டு வீரர்களை தான் எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் இல்லை காயம் ஏதேனும் ஏற்பட்டாலோ கூடுதலாக நீங்கள் வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ளலாம் என்று விதிகளை மாற்றுங்கள் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

சி எஸ் கே அணியில் நியூசிலாந்தை சேர்ந்த பிளமிங் நான்கு நியூசிலாந்து வீரர்களையும், மும்பை அணியின் இயக்குனர் ஜெயவர்த்தனே இலங்கை வீரர்களையும் அணியில் எடுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.