சிஎஸ்கே-வுக்கு முக்கியம் இல்ல… நான் இங்கிலாந்துக்கு பவுலிங் பண்ணனும் – பென் ஸ்டோக்ஸ் ஓப்பனாக பேட்டி!

0
2590

என்னுடைய பவுலிங்கை நான் துரிதப்படுத்த விரும்பவில்லை. சிஎஸ்கே அணியை விட இங்கிலாந்துக்கு பவுலிங் செய்வது கூடுதல் முக்கியம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். இவர் எடுக்கப்பட்டபோது ரசிகர்கள் பலர் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார் என்று கொண்டாடினர்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக, பென் ஸ்டோக்ஸ் தனது முழு உடல் தகுதியுடன் சிஎஸ்கே அணியில் இணையவில்லை. அதன் காரணமாக துவக்கத்தில் சில போட்டிகள் பவுலிங் செய்ய முடியாது என்று தகவல்கள் வந்தது. இருப்பினும் இரண்டாவது லீக் போட்டியில் பவுலிங் செய்தார். இதனால் நல்ல குணமடைந்து முழு உடல்தகுதிக்கு வந்துவிட்டார் என்று எண்ணினர்.

ஆனால் அடுத்ததாக நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டு வெளியில் அமர்த்தபட்டதால் இன்னும் சில போட்டிகளும் வெளியில் அமர்த்தப்படலாம் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

இதற்கிடையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசியது பரபரப்பு ஏற்படுத்துகிறது. பென் ஸ்டோக்ஸ் கூறியதாவத:

- Advertisement -

“நான் என்னுடைய குணமடையும் வேலையை துரிதப்படுத்த விரும்பவில்லை. நிதானமாக குணமடையட்டும். சிஎஸ்கே அணிக்கு எனது பவுலிங் குறித்து தெளிவாக கூறிவிட்டேன். அனைவரும் என்னுடைய இந்த முடிவிற்கு ஒப்புக் கொண்டார்கள். ஆகையால் மெல்ல மெல்ல குணமடைந்து ஆசஸ் போட்டிகளுக்கு பந்துவீசுவதையே முதல் முக்கியமாக கருதுகிறேன்.

இப்போது எத்தகைய பிளேயிங் லெவன் எடுக்கவேண்டும் என்று எனக்கு ஐடியா இருக்கிறது. வீரர்களுடன் இணைந்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுவதற்கு ஐபிஎல் முடிந்தவுடன் தயாராவேன். மேலும் நான்காவது பவுலராகவே பந்துவீசுவதற்கு உள்ளேன். அதன் அடிப்படையில் தான் இருக்கும் என்னுடைய பேட்டிங் முக்கியம் என்பதால், போதுமானவரை அதில் கவனம் செலுத்துகிறேன். முழு உடல் தகுதியை பெறுவதற்கு முயற்சித்து வருகிறேன்.” என்றார்.