ஐபிஎல் மினி ஏலம் இன்று தொடக்கம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

0
79

ஐபிஎல் மினி ஏலம் இன்று மதியம் இரண்டு முப்பது மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் முதன்முறையாக நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்கிறார்கள். மொத்தமாக உள்ள 87 இடத்திற்கு ஏலம் நடத்தப்படுவதால் இது விரைவாக நடந்து முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பட்டியலில் உள்ள முதல் 87 வீரர்கள் மட்டுமே வரிசையாக ஏலம் மேடைக்கு வருவார்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஏலத்தை விரைவாக முடிக்க பிசிசிஐ வேகத்தை அதிகப்படுத்தும். அதற்காக 88 வது இடத்தில் இருந்து 405 வது இடத்தில் வரை உள்ள வீரர்களை யார் வேண்டுமோ அவர்களுடைய பெயரை மட்டும் பிசிசிஐ தனியாக கேட்கும். அப்படி பத்து அணிகளும் கொடுக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏல மேடைக்கு கொண்டு வரும். அப்போது 30 வினாடிகளுக்குள் அணிகள் ஏலம் கேட்கவில்லை என்றால் வீரர்கள் விலை போகவில்லை என்று அறிவிக்கப்படுவார்கள் என்ற  முறை தீவிரமாக  கடைபிடிக்கப்படும்.

அதன்படி இரண்டு அணிகள் ஒரு வீரரை கேட்கும் போது ஒரு அணிக்கு அதிக தொகையை கேட்க பணம் இல்லை என்றால் டை பிரேக் முறை கடைபிடிக்கப்படும் .அதன்படி இரண்டு அணிகளும் தனியாக பிசிசி ஐக்கு  அதிக பணம் செலுத்த வேண்டும். இதில் எந்த அணி அதிக பணம் தருவதாக எழுதி தருகிறார்களோ அவர்களுக்கு அந்த வீர விளையாட்டுவார் கூடுதலாக வழங்கப்படும். பணம் அந்த வீரருக்கு செல்லாது இதன் மூலம் ஏதேனும் ஒரு வீரரை நாம் எடுத்து விட்டோம் என அணி மகிழ்ச்சி பட்டால் , இந்த டை பிரேக் முறைப்படி மற்ற அணிகள் மீண்டும் வாங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை அணி பொறுத்தவரை பிராவோக்கு மாற்று வீரராக ஷாம் கரணை தேர்ந்தெடுக்க காய்களை நகர்த்தும். மும்பை அணியை பொறுத்தவரை பொலார்க் பதிலாக கேமரா கிரீன் அல்லது பென் ஸ்டாக்சை வாங்க முடிவெடுக்கும். அதிக பணம் வைத்திருக்கும் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் நட்சத்திர வீரர்களாக அறியப்படும் பென்ஸ்டோக்ஸ், கேமரான் கிரீன், சாம்கரன் ஆகிய மூவருக்கும் கடும் போட்டியிடும். இதனால் இந்த மூன்று வீரர்களுமே அதிக விலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -