ஐபிஎல் எந்த அணியிடம் எவ்வளவு ரொக்கம் இருக்கு.. முழு விவரம்

0
139

ஐபிஎல் மினி ஏலத்தில் களமிறங்கும் பத்து அணிகளிடம் எவ்வளவு தொகை எஞ்சி இருக்கிறது என்பதை தற்போது காணலாம். நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதில் அவர்கள் ஏழு வீரர்களை வாங்க வேண்டும். டெல்லி அணியிடம் 19 கோடியே 45 லட்சம் இருக்கிறது. இதில் அவர்கள் ஐந்து வீரர்களை வாங்க வேண்டும்.

நடப்பு சாம்பியன் குஜராத்திடம் 19 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் 7 வீரர்களை வாங்க வேண்டும். கொல்கத்தா அணியிடம் வெறும் ஏழு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் தான் இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் 11 வீரர்களை வாங்க வேண்டும். லக்னோ அணியிடம் 23 கோடியே 35 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் 10 வீரர்களை வாங்க வேண்டும்.

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணியிடம் 20 கோடியே 55 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளது. இதனை வைத்து அவர்கள் ஒன்பது வீரர்களை வாங்க வேண்டும். பஞ்சாப் அணியிலும் 32 கோடியே 20 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் ஒன்பது வீரர்களை வாங்க வேண்டும். ராஜஸ்தான் அணியிடம் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து அவர்களும் ஒன்பது வீரர்களையே வாங்க வேண்டும்.

பெங்களூர் அணியிடம் எட்டு கொடியை 75 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் ஏழு வீரர்களை வாங்க வேண்டும்.  இந்த மினி ஏலத்திலேயே அதிகபட்சமாக ஹைதராபாத் அணியிடம் 42 கோடியே 25 லட்சம் இருக்கிறது. இதனை வைத்து அவர்கள் 13 வீரர்களை வாங்க வேண்டும். இதில் பல அணிகளிலும் குறைவான தொகையை இருப்பதால் குறைந்த பணத்தை நிர்ணயத்திற்கும் இந்திய வீரர்களுக்கு ஏலம் போக நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.