ஐபிஎல் ஏலம் –  விலை போகாமல் மாற்று வீரராக வர இருக்கும் 5 பந்துவீச்சாளர்கள்

0
3517

ஐபிஎல் மினி ஏலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெற்றது. இதில் பத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 80 வீரர்களை விலைக்கு வாங்கினர். இதில் அதிகபட்சமாக 18 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று சாம்கரன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் பல நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் விலை போகாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடர் சமயத்தில் ஏதேனும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் எந்த ஐந்து வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்பதை தற்போது காணலாம். தாம் மினி ஏலத்தில் விலை போகாதது குறித்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள சந்திப் ஷர்மா மாற்றுவீராக வர வாய்ப்பு இருக்கிறது.

கடந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சந்திப் சர்மா ஒரு ஓவருக்கு எட்டு ரன்களுக்கு குறைவாகவே கொடுத்திருக்கிறார். இதேபோன்று ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் திறமை வாய்ந்த வீரராக கருதப்படுகிறார். இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் வரை ஆடி 19 விக்கெட்டுகளை முஜிபுர் ரஹ்மான் வீழ்த்திருக்கிறார்.

இதனால் முஜிபுர் ரஹ்மானுக்கும் வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருப்பவர் சபாஷ் நதீம்.  72 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட் கைப்பற்றிய சபாஷ் நதிம் மினி ஏலத்தில் விலை போகவில்லை. இந்திய சுழற் பந்துவீச்சாளருக்கு தேவை ஏற்பட்டால் சபாஷ் நதி மாற்றுவீரராக செல்லலாம்.

- Advertisement -

இதே போன்று இலங்கை சேர்ந்த துஸ்மந்த் சமீரா கடந்த தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் துஷ்மந்த் சமீரா மாற்றுவீராக இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று மற்றொரு இலங்கை வீரர் தில்ஷான் மதுசங்கா ஐபிஎல் போட்டியில் விலை போகவில்லை. நல்ல வேகத்தில் வீசக்கூடிய தில்சான் மதுசாங்கா  மாற்று வீரராக செல்ல அதிக வாய்ப்பு உடையவராக திகழ்கிறார்.