2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் ; குறிப்பிட்ட 3 மைதானத்தில் மட்டும் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ

0
85
IPL 2022

ஐபிஎல் தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறவில்லை. கொரோனா தொற்று காரணமாக மக்களின் நலன் கருதி இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அங்கே உள்ள மைதானங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நிச்சயமாக இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ உத்தரவாதம் அளித்து இருந்தது.

ஐபிஎல் தொடர் முன்புபோல மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத்,பஞ்சாப், ராஜஸ்தான் அகமதாபாத் போன்ற மாநிலங்களில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பிசிசிஐ ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தற்பொழுது உள்ள சூழ்நிலை காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆண்டு நடைபெற உள்ள அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் மும்பையில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

மும்பையில் நடைபெற இருக்கும் 2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல்

மும்பை மாநிலத்தில் உள்ள வான்கடே, பிரபோர்ன் மற்றும் டிஓய் பட்டில் கிரிக்கெட் மைதானங்களில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடைபெறும் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. மும்பை மாநிலத்தில் வைத்து அனைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு மிக முக்கிய காரணம், வீரர்களின் நலன் கருதி மட்டுமே என்று கூறப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் மூலமாக வீரர்கள் ஒவ்வொரு போட்டியின் இடைவெளியில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வீரர்கள் அவ்வாறு பயணிப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே அனைத்துப் போட்டிகளையும் மும்பை மாநிலத்தில் வைத்து நடத்துவதன் மூலமாக, வீரர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருந்து அனைத்து ஐபிஎல் போட்டிகளும் பங்கேற்பார்கள்.

எனவே வீரர்களின் நலன் கருதி அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் மும்பையில் வைத்து நடத்தும் திட்டத்தை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது. அதேபோல ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக தற்பொழுது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் சூழ்நிலையைப் பொறுத்தே ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் இல்லையெனில் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் வைத்து நடைபெற்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மும்பையிலேயே முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.