புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் நமக்கு தெரியாத 6 பொறியியல் பட்டதாரிகள்

0
1798
Ravichandran Ashwin and Mitcell Santner

கிரிக்கெட்டில் விளையாடும் அனைத்து வீரர்களும் உலகப்புகழ் பெறுவதில்லை. பெரும்பாலான வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் ஆடிய பிறகு காணாமல் போய்விடுவார். ஆனால் கோஹ்லி, ரோஹித்,தோனி போன்ற வீரர்கள் பெரிய ஜாம்பவான்களாக கருதப்படுவர். அதற்கு முக்கிய காரணம் அவர்களது ரசிகர்கள்.

பெருவாரியான வீரர்களுக்கு அடிக்கடி வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்கள் சொந்த நாட்டிற்காக ஆடினோம் என்ற பெருமையுடன் ஏதாவது ஒரு அரசு உத்த்யோகத்திற்கு செல்வர். முதலில் படிப்பில் கவனம் செலுத்திவிட்ட பிறகு, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டலாம் என்று ஒரு சில வீரர்கள் முடிவு செய்திருப்பார்.

ஒருவேளை கிரிக்கெட்டில் நாம் முன்னேறவில்லை என்றால், அந்தப் பட்டிப்பு அவர்களுக்கு நிச்சயம் உதவும். பொறியியல் பட்டதாரியாக விளங்கும் புகழ்பெற்ற 6 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. சர்ப்ராஸ் அஹ்மத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கியவர் சர்ப்ராஸ் அஹ்மத். இவரது தலைமையின்கீழ் தான், பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ப்ராஸ், பாகிஸ்தான் அணிக்காக மூன்று வித கிரிக்கெட்டும் விளையாடி உள்ளார். சர்வதேச அளவில் 5500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

தற்போதைய பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பெறவில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடாத் தவறியதால், அணி நிர்வாகம் இவரை விளக்கியது. இவரது இடத்தில், முஹம்மது ரிஸ்வான், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நம்மில் பலருக்கு இவர் ஒரு பொறியியல் பட்டதாரி என்று தெரியாது. சர்ப்ராஸ் அஹ்மத், மின்னணு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

2. ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவி அஸ்வின், சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி பல சாதனைகளை படைத்து உள்ளார். இந்திய டெஸ்ட் அணியில், இவரது பங்களிப்பு அதிகம். அவ்வப்போது விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாட்டும் திறன் உடையவர்.

ஐ.பி.எலில், டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ஆடி வருகிறார். விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை அஸ்வின், படிப்பிலும் காட்டினார். சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் ஐ.டி படிப்பை இவர் முடித்துள்ளார். அதன்பின், கிரிக்கெட்டில் தன் திறமையை நிரூபித்து இந்திய அணிக்காக ஆட வந்துவிட்டார்.

3. சிக்கந்தர் ராசா

இவர் ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர். ஜிம்பாப்வே அணிக்காக ராசா சிறப்பாக செயல்பட்டு உள்ளார். என்னதான் அவரது அணி சர்வதேச அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இவர் தன்னுடைய பங்களிப்பை தவறாமல் தந்துள்ளார். சிக்கந்தர் ராசா, ஸ்காட்லாந்து நாட்டில் தன்னுடைய கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். இவர் மென்பொருள் பொறியாளராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

4. மிட்செல் சான்ட்னர்

சான்ட்னர், நியூசிலாந்து அணியின் முக்கிய ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டர். சர்வதேச டி20களில் இவர் மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டிகளில் விக்கெட்டுகள் வீழ்துவதை விட மிக முக்கியமான ஒன்று ரன்களை கட்டுப்படுத்துவது. அதில் மிட்செல் சான்ட்னர் சக்கரவர்த்தி.

ஐ.பி.எலில் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். குறைந்த போட்டிகளில் மட்டுமே வாய்புக் கிடைத்தாலும், அதை சிறப்பாக பயன்படுத்துகிறார். கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்படும் சான்ட்னர், படிப்பிலும் எவ்விதத்தில் குறைந்தவர் இல்லை. இவர் வைக்கட்டோ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

5. சயீத் அன்வர்

பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் சயீத் அன்வர். ஒருநாள் போட்டிகளில் 8824 ரன்ககளும் டெஸ்ட்டில் 4052 ரன்ககளும் விளாசியுள்ளார். அது தவிர்த்து, உள்நாட்டு போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்தோர் பட்டியலில் இவரது பெயரே நீண்ட காலமாக முதலில் இருந்தது. பேட்டிங்கில் இவரது திறமையை புரிந்த பலருக்கு இவரது படிப்பரிவை பற்றி தெரியாது. இவர், கம்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

6. சௌரப் நேத்தரவல்கர்

இந்திய யு-19 அணியின் முன்னாள் வீரராக இருந்த சௌரப் நேத்தரவல்கர், தற்போது அமெரிக்கா நாட்டில் உள்ளார். அமெரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

அவர் அமெரிக்கா நாட்டிற்க்கு செல்லும் முன்பே, இந்தியாவில் மென்பொருள் பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். அதன் பின் தான், அமெரிக்கா சென்று கிரிக்கெட்டை தொடர்ந்தார்.