2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் நடந்த, அவ்வளவாக அனைவருக்கும் தெரிந்திராத சில சுவாரசியமான 7 விஷயங்கள்

0
3543
IPL 2008 first Match

2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன.அந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் மிக அபாரமாக விளையாடி சதம் (158*) அடித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த போட்டியில் நடந்த மட்டும் சில சுவாரசியமான விஷயங்கள் அனைவருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களைப்பற்றி தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

1. பெங்களூர் அணியில் அதிக ரன்கள் அடித்த வீரராக பிரவீன்குமார் விளங்கினார்

முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 222 ரன்கள் எடுத்திருந்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய பெங்களூரு அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர்.

ஒரு முனையில் பிரவீன்குமார் மட்டும் நிதானமாக விளையாடி 18 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் மற்ற அனைத்து வீரர்களும் ரன்களுக்கு குறைவாகவே ரன்கள் குவித்து இருந்தனர். பிரவீன்குமார் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் ரன் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. முதல் பவுண்டரி மற்றும் முதல் விக்கெட்

Sourav Ganguly and Brendon McCullum

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி கொல்கத்தா அணிக்காக விளையாடினார். ஆட்டத்தின் முதல் பந்தை அவர் மேற்கொண்டு விளையாடினார். அதுபோலவே ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டாக அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜாஹீர் கான் வீசிய ஓவரில் சௌரவ் கங்குலி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதேபோல ஜாகீர்கான் வீசிய பந்தில் முதல் பவுண்டரி மற்றும் முதல் சிக்ஸர் என இரண்டையும் பிரண்டன் மெக்கல்லம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. அசோக் திண்டாவிடம் ஆட்டமிழந்த விராட் கோலி

தற்பொழுது உலக தரவரிசையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலி 2008ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் ஒரு இளம் வீரராக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார்.

மானுக்கு பந்துகள் மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே விராட் கோலி எடுத்து நிலையில் தன்னுடைய ஐந்தாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அசோக் திண்டா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி அவர் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

4. ஜாஹீர் கான் மற்றும் சௌரவ் கங்குலி

ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் முதலில் விளையாடிய சௌரவ் கங்குலி ஜாகீர்கான் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தது போலவே, இரண்டாவதாக பெங்களூர் அணியில் விளையாடிய ஜாகிர் கான் சௌரவ் கங்குலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

சொல்லி வைத்தது போல் இவர் அவரது பந்திலும் அவர் இவரது பந்திலும் ஆட்டமிழந்தது பார்க்க மிக சுவாரசியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

5. சுனில் ஜோஷி

Sunil Joshi RCB

தற்போதைய இந்திய அணியின் தேர்வுக்குழு ஆணிவேராக இருக்கும் இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பெங்களூர் அணிக்காக விளையாடினார்

கொல்கத்தா அணிக்கு எதிராக மூன்று ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் கொடுத்தார். அதேசமயம் பேட்டிங்கில் இவர் 3 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

6. ஆட்டத்தில் ஒரு நோ பால் கூட வீசப்படவில்லை

ஒரு அற்புத விஷயமாக நடந்தது இந்த ஆட்டத்தில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் ஒரு நோ பால் கூட வீசவில்லை. தற்பொழுது உள்ள கிரிக்கெட் போட்டிகளில் மிக சகஜமாக ஏதாவது ஒரு பந்து வீச்சாளர் நோபால் வீசிவிடுவார்கள்.

ஆனால் முதல் போட்டியில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் ஒரு நோபால் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7. தனது முதல் பந்திலேயே ராகுல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார் இஷாந்த் ஷர்மா

Rahul-Dravid RCB

இசாந்த் சர்மா கொல்கத்தா அணிக்காக விளையாடினார். தனது ஐபிஎல் கேரியரின் முதல் பந்தை ராகுல் டிராவிட்டுக்கு இசாந்த் சர்மா வீச வந்தார்.

மிக அற்புதமாக பந்து வீசி தனது முதல் பந்திலேயே ராகுல் டிராவிடை கிளீன் போல்ட் ஆக்கினார். மேலும் அந்தப் போட்டியில் இஷாந்த் ஷர்மா மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை (ராகுல் டிராவிட் விக்கெட்) கைப்பற்றி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.