டாப் 10

ரவீந்திர ஜடேஜாவை பற்றி அவ்வளவாக ரசிகர்களுக்கு தெரிந்திராத 7 சுவாரசிய தகவல்கள்

நவீனகால ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தேவைக்கேற்ப இக்கால வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஒரு அணியில் நிலைத்திருப்பதற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களே மிகவும் தேவைப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, 3டி எனும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கிலும் கவனம் செலுத்தக்கக்கூடிய ஆல்ரவுண்டர்களை தான் பெரும்பாலும் ஆடும் லெவனில் விளையாட அனுமதிக்கின்றது, அந்தந்த அணி நிர்வாகங்கள். இவ்வளவு சிறப்புமிக்க 3டி ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் உலகின் தலைசிறந்த பீல்டருமான ரவிந்திர ஜடேஜா குறித்த ஏழு சுவாரஸ்யமான தகவல்களை இனி காணலாம்.

- Advertisement -

1. இளமை கால வாழ்க்கை:

1988ஆம் ஆண்டு ஒரு இந்திய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், ஜடேஜா. இவரது தந்தை ஒரு காவலாளி மற்றும் இவரது தாயார் ஒரு மருத்துவமனையில் சேவை புரிந்த செவிலியர் ஆவார். இளமை காலங்களில் இனிதான தொடக்கம் கண்ட போதிலும் அவை பிற்காலத்தில் கசப்பாய் மாறின. ஏனெனில், இவரது பதின் பருவங்களிலேயே மிகவும் பாசத்துக்குரிய தாயார் இறந்துவிட்டார்.

2. தந்தையின் பேச்சை மீறிய ரவீந்திர ஜடேஜா:

இவருக்கு கிரிக்கெட் போட்டியின் மேல் கொண்ட தீராத காதலால் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு ஜொலித்தார். இருப்பினும், தமது மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இவரது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக கிரிக்கெட்டில் தொடர்ந்து காலம் செலுத்திய வந்துள்ளார். இருப்பினும், தன் இளமைக் காலத்தில் இவரது கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்ட தாயார் தொடர்ந்து இப்போட்டிகளில் கவனம் செலுத்த அனுமதித்து மேலும் சிறக்க போதிய அங்கீகாரம் வழங்கி உள்ளார்.

3. ஜடேஜாவுக்கும் தோனிக்கு உள்ள தொடர்பு:

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, அதிவேக வாகனங்களை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் பேரார்வம் கொண்டவர். அதுபோலவே ரவீந்திர ஜடேஜாவும் ஆடி ஏ4 போன்றபல ஆடம்பர கார்களை வாங்கி தமது ஆசைகளை அவ்வப்போது தீர்த்து வருகிறார்.
குறிப்பாக இவர் வாங்கும் ஒவ்வொரு கார்களின் பின்புறமும் “ரவி” என்ற பெயர் பொறித்து உள்ளது.

- Advertisement -

4. ராஜ்கோட்டில் உள்ள ஜடேஜா உணவகம்:

உணவு மீது அலாதி ஆர்வம் கொண்ட ராஜ்கோட் மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக பிரத்யேகமான உணவகம் ஒன்றை அமைத்துள்ளார். “ஜட்டூ ஃபுட் ஃபீல்ட்” எனும் பெயர் வைத்து ராஜ்கோட்டில் உள்ளூர் மக்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் தமது உணவகத்தை நடத்தி வருகிறார், ஜடேஜா.

5. இரண்டு முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் ஜடேஜா:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் முதன்முதலாக சர்வதேச வெளிச்சத்திற்கு வந்தார், ரவீந்திர ஜடேஜா. பின்னர், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மற்றுமொருமுறை இடம்பெற்று கோப்பையை வெல்ல உதவினார்.
ஒட்டுமொத்தமாக இந்த இருஉலக கோப்பைகளிலும் ரவீந்திர ஜடேஜாவின் பங்கு போற்றத்தக்கது.

6. குதிரைகளின் மேல் தீராக்காதல் கொண்ட ஜடேஜா:

சமூக வலைதளங்களில் தமது குதிரைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வரும் ஜடேஜா, தான் வளர்த்து வரும் இரு கம்பீரமான குதிரைகளுக்கு கங்கா மற்றும் கேன்சர் என பெயரிட்டுள்ளார். ஜாம்நகருக்கு வெகு தொலைவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இவை இரண்டும் வளர்க்கப்படுகின்றன.

7. பல செல்லப் பெயர்களை கொண்ட ஜட்டூ:

ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரராக விளையாடிக் கொண்டிருந்த போது வார்னே இவரை ராக் ஸ்டார் என அழைத்தார். இந்திய அணியில் இடம் கிடைத்த பின்னர், தமது சக வீரர்களால் “ஜட்டூ” என அவ்வப்போது அழைக்கப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் “சார்” என்னும் மரியாதைக்குரிய பெயரில் நெட்டிசன்களால் போற்றப்படுகிறார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது உள்ளூர் போட்டிகளிலும் நட்சத்திரமாய் ஜொலித்துவரும் ஜடேஜாவை தமது ரசிகர்கள் இன்னும் பல்வேறு பெயர்களைக் கொண்டு இவரை அழைத்து வருகின்றனர்.

Published by