கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆப்கான் அணிக்கு எதிரான உத்தேச வலிமையான இந்திய பிளேயிங் XI.. மாற்றம் உறுதி?

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது போட்டியில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது!

- Advertisement -

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறது.

அதேசமயத்தில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே அவர் ஆப்கானிஸ்தான் போட்டிக்கும் கிடைக்க மாட்டார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் படுதோல்வியை சந்தித்து, இரண்டாவது போட்டியில் பலமான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய சோதனையான கட்டத்தில் இருக்கிறது.

- Advertisement -

டெல்லி மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கைத் தென் ஆப்பிரிக்கா மோதிக்கொண்ட ஹை ஸ்கோரிங் போட்டி நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவிக்க இலங்கையணி 300 ரன்கள் தாண்டி எடுத்தது.

டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் சர்துல் தாக்கூர் இல்லை முகமது சமி விளையாடலாம்.

பலம் குறைந்த ஆப்கானிஸ்தான் என்கின்ற காரணத்தினால், சர்துல் தாக்கூருக்கு பதிலாக முழுமையான வேகப் பந்துவீச்சாளர் முகமது சமி இடம் பெறுவது நல்லது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

- Advertisement -
Published by