வீடியோ உள்ளே… புதுசா ட்ரை பண்றேன்னு மொக்கை வாங்கிய ரிஸ்வான்!

0
5598
Rizwan

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்து தொடரும் டிராவில் முடிந்தது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டிகளில் வென்று தொடர் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இன்று கராச்சி மைதானத்தில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது.

முதல் இரண்டு விக்கட்டுகளை 21 ரன்களுக்குள் பாகிஸ்தான அணி இழந்துவிட்டது. இதற்கு அடுத்து களத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மிகச் சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் இந்த ஆட்டத்தில் 74 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் குவித்தார்.

இதில் அவர் பேட்டிங் செய்கையில் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் சோதி பந்துவீச்சில், ஸ்டம்புக்கு வந்த ஒரு கூக்ளி பந்தை ஸ்கொயர் கட் அடிக்க வித்தியாசமாக முயற்சி செய்து கடைசியில் பரிதாபமாக போல்ட் ஆனார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் நகைச்சுவையாக பரப்பப்பட்டு வருகிறது. இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!