இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு இழைத்த அநீதி.. தன்னை மீண்டும் நிரூபித்த கிங் கோலி – பாகிஸ்தான் வீரரின் உருக்கமான பேட்டி.!

0
381

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வருபவர் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மூலம் கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். இன்றோடு 15 வருடங்களை சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு செய்திருக்கிறார் விராட் கோலி .

இந்திய அணிக்காக 51 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் விராட் கோலி 25,584 ரன்களையும் சேர்த்திருக்கிறார் இதில் 131 அரை சதங்களும் 76 சதங்களும் அடங்கும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரனாக விராட் கோலி விளங்கி வருகிறார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையிலும் தென்றல் கரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி .

- Advertisement -

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாடர்ன் கிரிக்கெட் லெஜன்ட் என்ற பெயருடன் வளம் வரும் இவர் இந்த சகாப்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த அவர் 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடருக்குப் பிறகும் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆக அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இவர் 2022 ஆம் ஆண்டு துபாயில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பையின் மூலம் மீண்டும் பாமுக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் டி20 கிரிக்கெட் வரலாறு மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் கேரியரில் ஒரு மகத்தான டி20 இன்னிங்ஸ் விளையாடினார் என்றால் மறுக்க முடியாது.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடம் பூர்த்தி செய்ததை கொண்டாடும் இதே வேளையில் பாகிஸ்தான் அணியின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் விராட் கோலியின் மகத்தான சாதனையை பற்றி இந்த நிகழ்ச்சியாக பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அக்தர் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை விராட் கோலியின் ராஜாங்கத்தை அவரிடம் மீண்டும் கொண்டு வந்த போட்டி இது என தெரிவித்திருக்கிறார் அக்தர்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அக்தர்” 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி முழுவதுமே விராட் கோலிக்கு சொந்தம். அந்தப் போட்டி நடைபெற்ற நேரத்தில் அவர் நல்ல ஃபார்மில் இல்லை . மேலும் இந்தியர்களாகிய நீங்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தீர்கள் . உங்களது நாட்டு மீடியாவும் அவரை குறை சொல்லியது . மேலும் போட்டி நடக்குமா? நடைபெறாதா என்ற சூழலில் மழை மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஆனால் அனைத்தையும் தாண்டி மைதானத்தில் கூடியிருந்த ஒரு லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் உலக கிரிக்கெட்டின் கிங் நான் தான் என நிரூபிப்பதற்கு கடவுள் அவருக்கு வழங்கிய மேடை அது” என்று உணர்வு பூர்வமாக கூறினார்.

இது குறித்து பேசுகையில் ” ஹாரிஸ் ரவுப் பந்தில் அவர் அடித்தடித்து எடுத்த இரண்டு சிக்ஸர்கள் அரசனின் அரியாசனத்தை மீண்டும் கிரிக்கெட் உலகின் அரசனான விராட் கோலிக்கு கொண்டு வந்து அவரது கால்களில் சமர்ப்பித்தது. விராட் கோலி மீண்டும் தன்னுடைய ஃபார்மிற்கு திரும்புவதற்கு இதைவிடப் பெரிய ஒரு சூழ்நிலை அமையும் என்றால் சந்தேகமே . மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள் இந்தியாவில் 100 கோடி மக்கள் தொலைக்காட்சிகளின் மூலம் கிரிக்கெட்டை பார்த்துக் கொண்டிருந்தனர் பாகிஸ்தானில் 30 கோடி மக்கள் கிரிக்கெட்டை பார்த்தனர் . எத்தனை கோடி மக்களுக்கு மத்தியில் விராட் கோலி தான்கிரிக்கெட் உலகின் கிங் நான்என நிரூபித்தார். இதுதான் சிறந்த வீரர்கள் தங்களை நிரூபிக்கும் வழி என உணர்ச்சிபூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசியிருக்கிறார்
சோயப் அக்தர்.