INDvsSA.. “நான் ஸ்டெயினின் சிஷ்யன்.. அந்த 2பேருக்கு எதிரா..” – கோட்சி சவால்!

0
227
Coetzee

கடந்த சில வருடங்களில் உலகக்கிரிக்கெட்டில் அறிமுகமாகிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களில், தென் ஆப்பிரிக்காவின் 23 வயதான வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்சி மிக முக்கியமானவராக இருக்கிறார்.

இவர் மணிக்கு 145 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசப்படும் திறனை பெற்றிருக்கிறார். பந்துவீச்சில் சில மாறுபாடுகளையும் இவரால் கொண்டுவர முடிகிறது. நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிக விக்கெட் கைப்பற்றியவராக வந்தார்.

- Advertisement -

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிக அதிகபட்சமான தொகைக்கு ஏலம் போவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இந்த காரணத்தினாலே இவர் அதிகம் ஏலத்தில் போகவில்லை. 5 கோடி ரூபாய்க்கு இவரை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வாங்கிக் கொண்டது. மற்ற அணிகள் வேறு யூகங்களை வகுத்துக் கொண்டார்கள்.

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி, ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மேலும் வெள்ளைப்பந்து கிரிக்கட்டிலும் பந்து வீசுவதற்கான தகுதிகளோடு இருக்கிறார்.

இவர் தன்னுடைய பந்துவீச்சு குருவாக பார்ப்பது தென் ஆப்பிரிக்காவின் லெஜெண்ட் ஸ்டெயின். அவரைப் போலவே பந்துவீச்சு முறையையும் வைத்திருக்கிறார். மேலும் அவரைப் போலவே எந்த காரணத்திற்காகவும் வேகத்தில் சமரசமும் செய்வது கிடையாது. எனவே அடுத்த ஒன்று இரண்டு ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சை இவர் வழிநடத்துவார் என்று தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் கருதுகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசி உள்ள ஜெரால்டு கோட்சி “இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் எனக்கு சவாலான ஒன்றாக இருக்கலாம். நான் சிறந்த அணிக்கு எதிராக என்னை சோதித்துக் கொள்ள விரும்புகிறேன்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பெரிய வீரர்கள். நான் ஒரு போட்டியாளனாக என்னை உயர் மட்டத்தில் சோதிக்க வேண்டும். அதே சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நான் ஒன்றும் புதியவனாக இருக்க மாட்டேன். அவர்கள் தரமான பேட்ஸ்மேன்கள். எனக்கு இது சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்.

என்னுடைய கிரிக்கெட் ஹீரோ டேல் ஸ்டெயின். நான் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் கடினமான பாதையில் செல்லும் பொழுது அவர் எனக்கு உதவி செய்தார். நாங்கள் ஒன்றாக காபி குடித்தோம். அவர் தன்னுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். எதிர்காலத்தில் அவருக்கு கீழ் நான் வேலை செய்வேன் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!