INDvsAUS.. நாளை இந்திய பிளேயிங் லெவன்.. ஸ்ரேயாஸ் வெளியே? சுந்தர் சிவம் துபே உள்ளே?.. மாற்றங்களுக்கு வாய்ப்பு!

0
2071
ICT

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முடிந்து அடுத்த மூன்று நாட்களில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துவங்கிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், நாளை பெங்களூர் மைதானத்தில் முடிவுக்கு வருகிறது.

இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி இந்த டி20 தொடரை கைப்பற்றியிருக்கிறது. எனவே நாளை நடக்கும் போட்டி தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பெரிதாக அவர்கள் மாற்றம் குறித்து கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் இந்த தொடர் முழுக்க நிறைய மாற்றங்களோடுதான் களமிறங்கி இருக்கிறார்கள். மூன்றாவது போட்டியோடு அந்த அணியில் இருந்த முக்கிய வீரர்களில் ஆறு வீரர்கள் ஆஸ்திரேலியா திரும்பி விட்டார்கள். தற்பொழுது சர்வதேச அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்கள் மட்டுமே அணியில் இருக்கிறார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடருக்கு என அறிவிக்கப்பட்ட வீரர்களில் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு வீரர்களை தவிர்த்து மற்ற எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாளை வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்று பார்க்க வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை அவர் நாளை ஆட்டத்திலும் விளையாடுவார். அவரை வெளியில் வைக்க மாட்டார்கள். அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க டி20 இந்திய அணியில் சிவம் துபே இல்லாததால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

- Advertisement -

மேலும் இந்திய வேகப்பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய தீபக் சகர், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் மூவரும் இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ரவி பிஸ்னாய் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்தாவது டி20 போட்டிக்கான உத்தேச வலிமையான இந்திய பிளேயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், ருதுராஜ், ஸ்ரேயாஸ், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சகர்
ரவி பிஸ்னாய், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.