INDvsAFG 2வது டி20.. நாளை நடைபெறுமா?.. மழை வாய்ப்பு எப்படி?.. முழு விபரங்கள்!

0
230
ICT

ஆப்கானிஸ்தான அணி முதல்முறையாக வெள்ளைப்பந்து தொடர் ஒன்றில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் பஞ்சாப் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறைகளிலும் செயல்பட்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியை தவறவிட்ட இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி பங்கேற்பார் என தெரிய வருகிறது.

இந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு தராத சில வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும். எனவே நாளைய போட்டியை வென்று தொடரையும் வெல்வது இந்திய அணிக்கு முக்கியமாக இருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டி நடைபெற்ற மொகாலி மைதானத்தில் போட்டியில் கடைசி கட்டத்தில் ஒன்பது டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இதன் காரணமாக வீரர்கள் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டார்கள். எனது இரண்டாவது போட்டியில் இப்படியான பாதிப்புகள் இருக்குமா? மழைக் குறுக்கீடு உண்டா? என்று பார்க்கலாம்.

நாளை இரண்டாவது போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் போட்டி ஆரம்பிக்கும் பொழுது அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். போட்டி முடிவடையும் பொழுது 17 டிகிரி செல்சியஸ் என்று வெப்பநிலை குறையும். மழை குறுக்கீடு சுத்தமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் 40 ஓவர்களும் தடை இன்றி நடைபெறும்!