நல்ல ஸ்டம்பிங் வாய்ப்பை மிஸ் பண்ணிய டிகே, நாங்க இப்போ தோனியை மிஸ் பண்றோம்ன்னு ‘தோனி,தோனி’ என கத்திய ரசிகர்கள் – வீடியோ பதிவு!

0
3746

தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் மிஸ் செய்தபோது, மைதானத்தில் ரசிகர்கள் ‘தோனி, தோனி’ என்று கரகோஷம் எழுப்பிய சம்பவம் நெதர்லாந்து போட்டியின் போது நேர்ந்துள்ளது. அதன் வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை சிட்னி மைதானத்தில் எதிர்கொண்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பவர் பிளேயில் வெறும் 32 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மாற்றினார். பவுண்டரி மற்றும் சிக்சர்களாக அடிக்க துவங்கினர்.

ரோகித் சர்மா அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூரியகுமார் இந்த அதிரடியை சற்றும் நிறுத்தாமல் தனது பங்கிற்கு மேலும் அதிரடியை துவங்கினார். இவர் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். பக்கபலமாக இருந்த விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்தார்.

இந்திய அணி அடுத்த 14 ஓவர்களில் கிட்டத்தட்ட 150 ரன்கள் சேர்த்து இருந்தது. 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்தது.

- Advertisement -

அடுத்ததாக இலக்கை துரத்திய நெதர்லாந்து வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை. சீரான இடைவெளிகளில் விக்கெடுகளை இழக்க தொடங்கினர்.

போட்டியின் எட்டாவது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அப்போது களத்தில் நின்று கொண்டிருந்த டி லீட், பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது மிஸ் ஆனது. தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்ய மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை தவறவிட்டார்.

அந்த தருணத்தில் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், ‘தோனி, தோனி’ என்று கரகோஷம் எழுப்பினர். தோனி இருந்திருந்தால் அந்த இடத்தில் ஸ்டம்பிங் எந்தவித தவறும் இன்றி சரியாக செய்து முடித்து இருப்பார் என்ற அர்த்தத்தில் அவர்கள் இந்த கரகோசத்தை எழுப்பியதால் தினேஷ் கார்த்திக் முகத்தில் சற்று அமைதி காணப்பட்டது.

அதன் பிறகு இந்திய அணி நெதர்லாந்து 123 நாட்களுக்குள் கட்டுப்படுத்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வீடியோ: