“இந்திய அணியின் உலகக்கோப்பை நாயகன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு” !

0
1406

2007 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்திருக்கிறது . இந்த வருடத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் முதலாக டி20 உலகக் கோப்பைகளை அறிமுகப்படுத்தியது. டி20 கிரிக்கெட் சர்வதேச அளவில் இன்று இருக்கும் நிலையை எட்டியதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது அந்த உலகக்கோப்பை என்றால் அது மிகையாகாது .

இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்திற்கும் இந்த உலகக்கோப்பையும் அதன் வெற்றியும் ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது . இந்திய அணியானது முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர்,ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி இல்லாமல் மகேந்திர சிங் தோனி என்னும் இளம் கேப்டன் தலைமையில் சென்ற முதல் உலகக்கோப்பையும் இதுதான் .

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து சாதனை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் அதே போட்டியில் 12 பந்துகளில் அரை சதத்தை எட்டி இன்று வரை டி20 போட்டியில் குறைவான பந்துகளில் அரை சதத்தை எடுத்தவர் என்ற சாதனை அவர் வசமே உள்ளது . இந்த டி20 உலக கோப்பையானது ரோகித் சர்மா,ராபின் உத்தப்பா போன்ற இளம் வீரர்களை இந்தியா அடையாளம் கண்டுகொள்ள பெரிதும் உதவியது .

அந்த வரிசையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆல் ரவுண்டர் ஜோகிந்தர் சர்மா. பாகிஸ்தான் அணியுடன் ஆன இறுதிப் போட்டியில் ஒரு ஓவர்களுக்கு 13 ரன்கள் தேவை என்று நிலையில் இறுதி ஓவரை வீசிய இவர் இரண்டாவது பந்தில் சிக்ஸரை கொடுத்தாலும் நாலு பந்துகளுக்கு ஆறு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மிஸ்பா உன் ஹக் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் . இந்த தருணத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மறக்க முடியாது .

இன்று இவர் சர்வதேச மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறார் . இதுகுறித்து பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் சா க்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது ஓய்வை தெரிவித்துள்ளார் ஜோகிந்தர் சர்மா . இது குறித்து தெரிவித்துள்ள அவர் “2002-2017 வரை உள்ள ஆண்டுகள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயணம் . ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இந்தியாவிற்காக விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று, உங்கள் அனைவருடனும் இணைந்து விளையாடியது ஒரு பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2004-2007 காலகட்டங்களில் இந்திய அணிக்காக நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார் ஜோகிந்தர் ஷர்மா. ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் டி20 போட்டிகளில் நான்கு விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் . நான்கு ஒரு நாள் போட்டிகளில் 35 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஹரியானா அணிக்காக 77 முதல் தரப் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 5 சதங்கள் மற்றும் 10 அரை சதங்களுடன் 2804 ரண்களையும் 297 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக துவங்கிய இவர் கடைசி ஒரு நாள் போட்டியை 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அனுப்பிய எதிராக ஆடினார் . .

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் நான்கு சீசன்களில் ஆடி உள்ள இவர் 16 போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது ஹரியானா மாநில காவல் துறையில் டி எஸ் பி யாக பணியாற்றி வருகிறார்.