இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வெளியேறும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்!

0
2299
ICT

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இரண்டாவது டி20 போட்டி நாளை புனே நகரில் நடைபெற இருக்கிறது . நேற்று நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அறிமுக வீரர் சிவம் மாவி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பேட்டிங்கில் தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை அளித்தனர்.

இலங்கை அணியின் தரப்பில் கேப்டன் சனகா அபாரமாக ஆடி 45 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த போட்டியில் இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சிவம் மாவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் டி20 போட்டிகளில் நேற்று முதலாக களம் இறக்கப்பட்டனர் .

- Advertisement -

இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார் . அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் . மேலும் இந்திய அணியின் ஃபீல்டிங்கின் போது கேட்ச் மற்றும் ரண்களை சேமிக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டார்.

இந்நிலையில் ஆட்டத்தின் 15 வது ஓவரின் போது உம்ரான் மாலிக் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் அடித்தார் சனக்கா டீப் பாய்ண்டில் பில்டிங் செய்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன் அந்த பந்தை தடுக்க வரும் போது கோட்டை விட்டதால் பந்து நான்கு ரன்களுக்கு சென்றது . அப்போது அவரது முட்டி ஆடுகளத்தில் பதிந்து காயத்தை ஏற்படுத்தியது.

அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆட்டம் முழுவதும் பில்டிங் செய்தார் சஞ்சு சாம்சன் . ஆனால் அவர் இந்திய அணியுடன் இணைந்து புனே செல்லவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது . நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட காயம் அதனால் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக அவரை ஓய்வு எடுக்க அணியின் மருத்துவ குழு அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது . இதனால் சஞ்சு சாம்சன் மும்பையிலேயே தங்கி இருக்கிறார் . மூன்றாவது t20 போட்டியிலும் கலந்து கொள்வாரா என்பது பற்றி தெரியவில்லை.

- Advertisement -

சமீபகாலமாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது என்பது நாம் அறிந்ததே . நான் தற்போது அவருக்கான வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை அவர் தவற விட்டு தற்போது இரண்டாவது போட்டிக்கு முன்பாக காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது . இதனால் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவற விட்டார் என்றே கூறலாம் . இந்த காயம் அவருக்கு துரதிஷ்டவசமான ஒன்றாகும்