ஆஸ்திரேலியா-சவுத் ஆப்ரிக்கா டெஸ்ட் டிரா ஆனதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குள் நுழைய இந்தியாவிற்கு கூடுதல் சிக்கலா? பைனல் செல்ல இன்னும் என்ன செய்யவேண்டும்? – ரிப்போர்ட்!

0
3570

ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவிற்கு பிறகு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் என்ன மாற்றம்? இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இனி என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்ப்போம்.

தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

- Advertisement -

சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடு காரணமாக டிராவில் முடிந்திருக்கிறது. 0-2 என டெஸ்ட் தொடரை இழந்ததால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி 48.72% வெற்றிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

53.33% வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. 58.93% வெற்றியுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 75.56% வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருக்கிறது.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இரண்டாவது இடத்திற்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளும் கடுமையாக போட்டி போடுகின்றன.

- Advertisement -

இந்திய அணிக்கு கடைசியாக ஆஸ்திரேலியா அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. தென் ஆப்பிரிக்க அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இலங்கை அணிக்கு நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன.

இந்தியா தகுதிபெற வாய்ப்புகள்:

இந்திய அணி ஆஸ்திரேயாவை 4-0, 3-0 அல்லது 3-1 என்கிற கணக்கில் வீழ்த்திவிட்டால், இந்திய வேறு எந்த அணியையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

அதே நேரம் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி சந்தித்து டெஸ்ட் தொடரில் இழந்தால், 45.4% வெற்றிகளுடன் இறுதிபோட்டி வாய்ப்பை இழக்கும்.

ஆஸ்திரேலியா அணியை 2-1 என வீழ்த்தினால், 58.85% வெற்றிகளை இந்தியா பெறும், 2-0 என வென்றால் 60.65% பெறும், 1-0 என வென்றால் 56.94 பெறும். இந்த சூழலில் தென்னாபிரிக்கா தகுதி பெறாது. ஆனால் இலங்கை அணிக்கு வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணியை 2-0 வீழ்த்தினால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஆனால் 1-1 டிராவில் முடிந்தாலோ அல்லது 0-2, 0-1 என தொடரை இழந்தாலோ அப்போது இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

இந்தியா 2-2 என டிரா செய்தால் 56.4% வெற்றிகளை பெறும். அப்போதும் மற்ற அணிகளை சார்ந்து இருக்க வேண்டும். தென்னாபிரிக்கா வெளியேறிவிடும். இலங்கை அணி நியூசிலாந்து உடன் தொடரை கைப்பற்றினால் இந்தியா வெளியே, தொடரை இழந்தால் இந்தியா உள்ளே என்கிற நிலைக்கு தள்ளப்படும்.

இந்தியா 1-2, 0-2, 1-3 என தொடரை இழந்தால், தென்னாபிரிக்கா இலங்கை இரு அணிகளின் வெற்றி தோல்வியை நம்பி இருக்க வேண்டும். இந்த சூழலில் இலங்கை 1-0 என தொடரை கைப்பற்றினாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.