3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணி!

0
2754

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி கணிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் மாதம் பதினாறாம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் இரண்டு போட்டிகளிலும் நன்றாகவே அமைந்தது. பந்துவீச்சு மட்டுமே தற்போது குறைபாடாக இருக்கிறது. புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் யுசுவேந்திர சஹல் ஆகிய மூன்று பேரும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் டெத் ஓவர்களுக்காக உள்ளே எடுத்துவரப்பட்டார். ஆனால் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்.

மொகாலியில் நான்கு ஓவரில் 49 ரன்கள், நாக்பூரில் இரண்டு ஓவரில் 32 ரன்கள் என இவரது எக்கனாமி உச்சத்தில் இருக்கிறது. ஆகையால் இந்த போட்டியில் இவர் வெளியில் அமர்த்தப்பட்டு தீபக் சகர் உள்ளே எடுத்து வரப்படலாம். புவனேஸ்வர் குமார் துவக்க சில ஓவர்களில் நன்றாக பந்து வீசுகிறார். அவருக்கு பக்க பலமாக தீபக் சகர் இருப்பார். மிடில் ஓவர்களில் அக்சர் பட்டேல் அசத்துகிறார். இரண்டு போட்டிகளிலும் இவரது எக்கனாமி மிகக்குறைவாக இருந்ததோடு விக்கெட்டுகளையும் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தினார். சகல் மீண்டும் தனது பழைய பார்மிற்கு திரும்பும் பட்சத்தில் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்த முடியும்.

டெத் ஓவர்களில் பும்ரா பார்த்துக் கொள்வார். தீபக் சகர் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா ஒரு ஓவர்கள் டெத் ஓவர்களில் வீசும் போது இந்திய அணி திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

- Advertisement -

மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி:

கே எல் ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், சஹல், பும்ரா, தீபக் சகர்.