2வது டி20ல் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு!

0
1931

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி இங்கே கணிக்கப்பட்டுள்ளது. இதில் யார் உள்ளே? யார் வெளியே? என்று கணிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் கட்டமாக விளையாடுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டி முற்றிலும் பந்து வீச்சிற்கு சாதகமான மைதானமாக மாறியது. முதல் போட்டியில் இந்தியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனை அடுத்து கௌகாத்தி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி இங்கே கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிதளவில் மாற்றம் இருக்காது.

துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் கே எல் ராகுல் இருவரும் களம் இறங்குவர். முதல் டி20 போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழந்த பிறகு, நிதானமாக விளையாடி 56 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் கே.எல் ராகுல். நல்ல ஃபார்மில் இருக்கும் இவர் இப்போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக விராட் கோலி முதல் போட்டியில் பெரிதளவில் சோபிக்கவில்லை. நல்ல பார்மில் இருக்கும் இவரும் மீண்டும் இந்திய அணிக்காக ரன்களை குவிப்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் அவளுடன் உள்ளனர். 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக சூரியகுமார் யாதவுக்கு அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தொடரிலும் பேட்டிங் மூலம் கால் பதித்திருக்கிறார்.

முதல் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் இவர். 33 பந்துகளில் அரைசதம் அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருக்கின்றனர். இத்தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்கள் அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் இருவரும் இருக்கின்றனர். முதல் போட்டியில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், நான்கு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்த அக்ஸர் பட்டேல், தென்னாப்பிரிக்கா தொடரிலும் அதை தொடர்ந்து செய்து வருவதால் அவருக்கு இரண்டாவது போட்டியில் நிச்சயம் இடம் இருக்கும்.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் சென்ற போட்டியில் அசத்தினர். ஹர்ஷல் பட்டேல் நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். தீபக் சஹர் பவர்-பிளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் விக்கெட்டுகளையும் கைப்பற்றுகிறார். நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இளம் வேகம் பந்துவீச்சாளர் அர்ஷதிப் சிங், ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இவர் நான்கு ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் போட்டியில் கிட்டத்தட்ட 11 இந்திய வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டதால் இரண்டாவது டி20 போட்டியில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது டி20ல் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி:

ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், தீபக் சகர், அர்ஷதீப் சிங்.