நாளை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.
தற்போது இந்திய அணியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சர்துல் தாக்கூர், சுழற்பந்து வீச்சுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் என இருவர் இருக்கிறார்கள். மேலும் கூடுதல் பேட்ஸ்மேன் ஆக இஷான் கிஷான் இருக்கிறான். கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்.
போட்டி நடைபெறும் மும்பை மைதானம் சிறிய எல்லைகளைக் கொண்ட மைதானம். எனவே இங்கு பெரும்பாலும் சுழற் பந்துவீச்சாளர்களை நம்பி களம் இறங்க மாட்டார்கள்.
மேலும் மும்பை ஆடுகளம் செம்மண் ஆடுகளம். இது வேகப்பந்துவீச்சுக்கு உதவி செய்யக்கூடும். இப்படியான காரணங்களால் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவது கடினம்.
மேலும் வேகப்பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டால் ஏற்கனவே விளையாடும் அணியில் இருப்பவர்கள் மற்றும் பிரசித் கிருஷ்ணா என வேகங்கள் இருக்கிறது. எனவே சிறிய மைதானமான மும்பையில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவது கடினம்.
மேலும் வெளியில் இருக்கக்கூடிய கூடுதல் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களான இஷான் கிஷான் மற்றும் பிரசித் கிருஷ்ணா, ஏற்கனவே விளையாடும் அணியில் யாராவது காயமடைந்தால் மட்டுமே இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இப்படியான காரணங்களால் கடைசியாக 5 போட்டிகளில் எந்த இந்திய அணி களம் இறக்கப்பட்டதோ அதே அணிதான் களம் இறங்கும். இதில் எந்தவித மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள் என்பதுதான் உறுதியான விஷயம்.
மேலும் பகலில் பந்தில் அசைவுகள் இருக்காது. இரவில் பனிப்பொழிவு இருக்கும். எனவே முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது இங்கு மிக முக்கியமானது.
அதேபோல் இரண்டாவது பேட்டிங் செய்தால் முதல் 20 ஓவர்களுக்கு புதிய பந்து மின்விளக்குகளின் கீழ் நன்றாக அசையும். எனவே இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது இதைக் கவனத்தில் கொண்டு, விக்கெட் கொடுக்காமல் விளையாட வேண்டும். சீரான வேகம் மற்றும் சீரான பவுன்ஸ் இருக்கும்.
முதல் அரையிறுதிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:
ரோகித் சர்மா, கில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் முகமது சிராஜ்.