“உலகக்கோப்பை தொடர் முழுவதும் இதே 11 வீரர்கள் தான் ஆடுவார்களா?; ஆஸ்திரேலியாவுடன்பயிற்சி ஆட்டத்திற்கு இந்தியாவின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
7547

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாவது உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தகுதி சுற்று நடைபெறுகிறது. இதில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்று வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது.

இந்திய அணி முதல் போட்டியில் 23ஆம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கிறது. தனது முதல் போட்டிக்கு இன்னும் ஒரு வார காலம் இருப்பதால் கூடுதலாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. முதலாவதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அக்டோபர் 17ஆம் தேதி விளையாடுகிறது. அதன் பிறகு அக்டோபர் 19ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறும் இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்பதற்கு இந்திய வீரர்கள் ஏற்கனவே அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பும்ராவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட முகமது சமியும் நேற்றைய தினம் இந்திய அணியில் இணைந்து தனது பயிற்சியை துவங்கினார்.

ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இம்முறை களம் இறக்கப்படுகிறார். பும்ராவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட சமி பெயர்ச்சி ஆட்டத்தில் ஆட வைக்கப்படவில்லை. நேற்றைய தினம் தான் அணியில் இணைந்து இருக்கிறார். உடனடியாக ஆட வைப்பது சரியாக இருக்காது என்று ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

2021 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது அவர் கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு எந்தவித சர்வதேச டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடினார். தற்போது மீண்டும் இந்திய அணிக்குள் இணைந்து டி20 போட்டிகளில் விளையாடுவதால், எவ்வாறு சரிவரும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதனால் முதல் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாட வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது உடல்நிலை கருதி அது நடக்கவில்லை ஆகையால் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இருப்பார்கள் என்றும் தெரிகிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் பட்டேல், அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷதிப் சிங்