“இந்தியன்ஸ் நாங்க இந்தியாவுக்கு வரணும்னு நினைக்கிறாங்க”.. நடுவுல நீங்க யாருடா தடுக்க? – ஷாஹித் அப்ரிடி சரியான பதில்!

0
1091

இந்தியர்கள் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என சமீபத்திய பேட்டியில் ஷாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி நிர்வாகங்களுக்கு இடையே பனிப்போர் கடந்த ஒரு மாதமாக உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதலில் பி சி சி ஐ செயலாளர் ஜெய் ஷா, “இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பையில் பங்கேற்காது. பொதுவான ஒரு இடத்தில் நடத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கூறுகையில், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், நாங்கள் 2023 50 ஓவர் உலகக் கோப்பை விளையாடுவதற்கு இந்தியா வர மாட்டோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் உங்களுக்கு வருமானம் இருக்காது.” என்று தடாளடியாக பதில் கொடுத்தார்.

இந்த விவகாரம் சாந்தமடையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் பாதிக்கப்படப்போவது ரசிகர்கள் தான். உலகிலேயே அதிதீவிரமான கிரிக்கெட் போட்டி என்றால், இந்தியா-பாகிஸ்தான் போட்டி தான். அதை கண்டுகளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்காது.” என்று பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி சமீபத்திய பேட்டியில், அனைவரையும் கவரும் அளவிற்கு பதில் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீடிக்கிறது. அரசியல் காரணங்களுக்காக பிரிந்து இருப்பது கிரிக்கெட் போட்டிகளால் மீண்டும் ஒன்று சேர உதவுகிறது. இந்தியர்களே பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் அதை கண்டுகளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் கிரிக்கெட் போட்டியை வளர்ப்பதற்கு மட்டுமே இரு அணி நிர்வாகங்களும் போராட வேண்டுமே தவிர, அரசியல் தாண்டி கிரிக்கெட்டிலும் இரு நாடுகளும் சண்டையை வளர்த்துக்கொள்ளக் கூடாது.” என்றார்.