ஆசியக் கோப்பையில் பங்களாதேசை பந்தாடியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி; அரையிறுதிக்கு முன்னேற்றம்!

0
358
Asiacup2022

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா, யுஏஇ என ஏழு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன!

இந்த ஏழு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும். முதல் சுற்றில் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சாம்பியன் அணி தேர்வாகும்!

- Advertisement -

நேற்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடிய ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருந்தது. அதே சமயத்தில் தாய்லாந்து அணி பாகிஸ்தான் அணி அதற்கு முந்திய நாட்களில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்திருந்தது.

இந்த நிலையில் இன்று பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே நான்கு ஆட்டங்களில் விளையாடி அதில் மூன்று ஆட்டங்களை வென்று 6 புள்ளிகளுடன் இருந்தது. பங்களாதேஷ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி அதில் இரண்டு ஆட்டங்களை வென்று 4 புள்ளிகளுடன் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள்
ஸ்மிருதி மந்தனா மற்றும் செபாலி வர்மா இருவரும் சிறப்பான தொடக்கத்தை இந்திய அணிக்கு தந்தார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 90 ரன்களை கடந்தது.

- Advertisement -

இதற்கடுத்து எதிர்பாராதவிதமாக ஸ்மிருதி மந்தனா 47 (38) ரன்களில் ரன் அவுட் ஆக, அங்கிருந்து இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் சரிந்தது. இதற்கடுத்து தாக்குப்பிடித்து விளையாடிய செபாலி வர்மா
55 ( 44) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்டரிக்ஸ் 35 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு வந்த எந்த இந்திய வீராங்கனைகளும் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை. எடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது!

160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஸ் வீராங்கனைகள் முதல் மூன்று பேர் 30, 21, 36 என்று சராசரியான ரன் பங்களிப்பை தந்தாலும், அவர்கள் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு ஓவருக்கு ஓவர் தேவைப்படும் ரன் விகிதம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர்களால் இந்திய பந்து வீச்சை தாக்கி ஆட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஸ் வீராங்கனைகளால் 100 ரன்களை மட்டுமே திரட்ட முடிந்தது.

இதையடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. பேட்டிங்கில் அரைசதம், பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய செபாலி வர்மா ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!