2022 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 3 தோல்வி – அரை இறுதிக்குள் நுழைய இந்திய மகளிர் அணி செய்யா வேண்டியவை இதுதான்

0
209
Indian Womens Cricket Team Worldcup 2022

ஐசிசி மகளிர் அணி உலக கோப்பை தொடர் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதின.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 67 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.3 வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லேணிங் 93 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்

நேற்றைய தோல்வி இந்திய மகளிர் அணி பெறும் மூன்றாவது தோல்வி ஆகும். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி (பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக) மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வி (நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக) அடைந்துள்ளது.

இந்திய மகளிர் அணிக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகள் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு எதிராக நடைபெற இருக்கின்றது. எஞ்சியுள்ள 2 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி அடைய முடியும். எனவே எஞ்சியுள்ள 2 போட்டியிலும் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

ஐசிசி மகளிர் அணி உலக கோப்பை புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 போட்டிகளில் நான்கு வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி கிட்டத்தட்ட அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி அடைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு இன்னும் மூன்று போட்டி இருக்கும் நிலையில் அந்த அணியும் ஏறக்குறைய தகுதி அடைந்துவிடும்.

- Advertisement -

எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கு தான் தற்போது போட்டி நிலவி வருகிறது. இந்தியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் இந்திய அணி மேல் குறிப்பிட்டதுபோல அடுத்து வரயிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று விட்டாலே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி அடைந்துவிடும்.