டாப் 10

அண்டர் 19 இந்திய அணியில் சிறப்பாக விளையாடி அதன் பின்னர் காணாமல் போன 5 இந்திய வீரர்கள்

உலக அளவில் நடக்கும் அண்டர்-19 உலக கோப்பை தொடரில் பல இளம் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு அதன் பின்னர் தங்களுடைய நாட்டு அணியில் இணைந்து சர்வதேச அணிகளுக்கு எதிராக விளையாடுவார்கள். அதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே மிக சிறப்பாக செயல்பட்டு அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

- Advertisement -

மறுமுனையில் ஒரு சில வீரர்கள் தொடர்ச்சியாக சரியாக விளையாடாத காரணத்தினால் சரிவர வாய்ப்பு கிடைக்கப் படாமல் அப்படியே யாருக்கும் தெரியாமல் காணமல் போய்விடுவார்கள். அப்படி அண்டர் 19 உலக கோப்பை தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு அதன் பின்னர் சீனியர் லெவல் போட்டிகளில் விளையாட முடியாமல் போன இந்திய இளம் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

5. டன்மை ஸ்ரிவட்சவா

2008ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விராட் கோலி ரவிந்திர ஜடேஜா மனிஷ் பாண்டே ஆகியோர் உடன் இணைந்து விளையாடிய வீரர் அந்த தொடரில் சிறப்பாகவே விளையாடினால் என்று கூறவேண்டும். இந்திய அணிக்காக பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்த வீரரும் இவரே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிக அற்புதமாக விளையாடினாலும் அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை காண்பிக்க தவறினார். அதன் காரணமாகவே அதற்கு அடுத்து அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் போனது. தொடர் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இவர் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.

4. உன்முக்த் சந்த்

இவர் விளையாடிய அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இவரது பெயரைக் கேட்டால் அனைத்து அணிகளுக்கும் சட்டென ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அற்புதமாக இவர் விளையாடிய ஒரு வீரர். இவர் அற்புதமாக விளையாடியதன் காரணமாக இந்திய அளவில் இவருடைய பெயர் பிரபலமானது. அதன் காரணமாக மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

இருப்பினும் தனக்கு கிடைக்கப்பட்ட ஐபிஎல் வாய்ப்பு மற்றும் உள்ளூர் தொடர் வாய்ப்புகளில் மிக சிறப்பாக செயல்படாத காரணத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். அதன் பின்னர் இவரால் இந்திய அணியில் மட்டுமல்லாமல் உள்ளூர் தொடரிலேயே விளையாட முடியாமல் போனது. தற்போது வந்த செய்தியின் அடிப்படையில் இவர் கூடிய விரைவில் அமெரிக்கா சென்று அங்கே குடியுரிமைப் பெற்றுக்கொண்டு, அந்நாட்டு அணிக்காக விளையாட போகிறார் என்று தெரியவந்துள்ளது.

3. யோ மகேஷ்

2006 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இவரும் ஒருவர். அந்த தொடரில் இவர் மிக சிறப்பாக செயல்பட்டு 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் தான் அறிமுகமாகிய முதல் ஐபிஎல் தொடரிலேயே மிக சிறப்பாக விளையாடி அனைவரிடமும் நற்பெயர் பெற்று கொண்டார்.

மறுமுனையில் உள்ளூர் தொடர்களில் மிக அற்புதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வீரராகவும் இவர் திகழ்ந்தார். எனினும் இவருக்கு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

2. கௌரவ் திமன்

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து இவர் விளையாடினார். இவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் என்பது. எதிர்முனையில் ரோகித் மற்றும் புஜாரா போன்ற வீரர்கள் இருக்கையில் அவர் தனக்கான அங்கீகாரத்தை அவ்வளவு எளிதில் பெற முடியாமல் போனது. அடிப்படையில் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் வீரரான இவர் மிக அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர். இருப்பினும் இவருக்கு சீனியர் லெவல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1. மன்விந்தர் பில்லா

2002-ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 நாட்டின் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இவர் திகழ்ந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியது அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் கோப்பையை பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவிய பங்கு இவருக்கு இருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிக சிறப்பாக செயல்படும் இறுதியில் சீனியர் லெவல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by