முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி; இந்திய அணியின் பிரம்மாண்ட வெற்றியை தடுத்தார் சனகா!

0
2729
IndvsSl

இந்திய அணி இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் விளையாடியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா உடன் கில் இறங்கினார்!

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு
143 இரங்கல் சேர்த்தார்கள். ரோகித் சர்மா 83 ரன்கள், கில் 70 ரன்கள், விராட் கோலி 113 ரன்கள் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 373 ரண்களை ஏழு விக்கெட்டுகளை இழந்து சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் நிசாங்கா மட்டும் 72 ரன்கள் எடுத்து ஆரம்பக் கட்டத்தில் ஆறுதல் அளித்தார். அதற்கு அடுத்து தனஞ்செய டி சில்வா 42 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி 37.5 ஓவர்களில் 208 ரண்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய தோல்விக்கு தயாராகி இருந்தது. இந்த நிலையில் களம் இறங்கிய பந்துவீச்சாளர் ரஜிதாவை வைத்துக்கொண்டு கேப்டன் சனகா இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி தள்ளிவிட்டார்.

மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 87 பந்துகளில் கடைசி ஓவரில் சதம் விளாசி அசத்தினார். இறுதி வரை களத்தில் நின்ற அவர் 88 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். இலங்கை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது. முடிவில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்பொழுது இந்திய அணி முன்னிலை வகிக்கிறது!