இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் பொழுது எந்த அணியுடன் மோதும்?

0
3155
ICT

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 13-ஆம் தேதி மெல்போன் மைதானத்தில் நடக்க இருக்கிறது!

குழு 1ல் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. நாளை இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டாலோ, அல்லது இங்கிலாந்து அணி தோற்றாலோ, ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும். இந்த இரண்டும் நடக்காவிட்டால் இலங்கை அணியை வென்று ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

- Advertisement -

குழு 2ல் அரையிறுதிக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இருக்கின்றன. இதில் தற்போது தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் நெதர்லாந்து உடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷுடன், மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் விளையாட இருக்கின்றன.

இந்தப் போட்டிகளில் மூன்று அணிகளும் வெல்கின்ற பட்சத்தில், இந்திய அணி 8 புள்ளிகள் உடன் தனது குழுவில் முதலிடம் பிடிக்கும். தென்னாப்பிரிக்கா 7 புள்ளிகள் உடன் இரண்டாம் இடம் பிடிக்கும். இந்த இரண்டு அணிகளும்
அரையிறுதிக்கு முன்னேறும்.

- Advertisement -

இந்திய அணி தனது குழுவில் முதலிடம் பிடிக்கும் பட்சத்தில், இன்னொரு குழுவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் அரை இறுதியில் விளையாட வேண்டியது வரும். இந்த வகையில் தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய இல்லை இங்கிலாந்து அணி உடன் மோத அதிக வாய்ப்புகள் உண்டு.

அதே சமயத்தில் இந்திய அணியின் ஆட்டம் மழையால் தடைபட்டு ஒரு புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்தை வெல்கின்ற நிலையில், இந்திய அணியும் தென்னாபிரிக்கா அணியும் தலா 7 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கும் . ஆனால் ரன் ரேட் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி முதலிடம் பிடிக்கும். இந்திய அணி இரண்டாம் இடம் பிடிக்கும்.

இப்படி இந்திய அணி இரண்டாம் இடம் பிடிக்கும் பட்சத்தில் இன்னொரு குழுவில் முதலிடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து அரையிறுதியில் விளையாட வேண்டியது வரும். தற்போதுள்ள நிலையில் இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்வது கொஞ்சம் எளிதாக இருக்கலாம்.