ஐசிசி தரவரிசையில் மீண்டும் தொடங்கியது இந்திய வீரர்களின் ஆதிக்கம்!-முகமது சிராஜ் ஒருநாள் போட்டியில் நம்பர்-1 பந்துவீச்சாளர்!

0
3988

நியூசிலாந்துஅணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி டி20 போட்டி தொடர்களுக்காக தயாராகி வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் கிளீன் ஸ்வீப் செய்து வெற்றி பெற்றதனால் இந்திய அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது .

வருகின்ற வியாழக்கிழமை நடக்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி தொடர்களுக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் இந்த டி20 தொடரில் அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது .

- Advertisement -

நடந்து முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,சுப்மன் கில் .விராட் கோலி குல்தீப் யாதவ்.முகம்மது சிராஜ் மற்றும் முகமது சமி ஆகியோர் திறமையாக செயல்பட்டனர். குறிப்பாக முஹம்மது சிராஜ் இந்த இரண்டு ஒருநாள் போட்டி தொடர்களிலும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . கடந்த ஆண்டு முதலே ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் முகமது சிராஜ் . கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் முகமது சிராஜ் 37 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார் . மேலும் அவர் கடந்த வருடத்திற்கான ஐசிசி யின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் சிராஜ் . இந்திய வேக பந்துவீச்சாளர்களில் கடந்த ஜூலை மாதம் பும்ரா இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .729 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் முகமது சிராஜ் . ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் 727 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 708 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்களில் சிறப்பாக ஆடிவரும் சுப்மன் கில் ஐசிசி ஒரு நாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி ஏழாவது இடத்திலும் நேற்றைய போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தற்போது மேலோங்கி இருக்கிறது .