இனி ரவீந்திர ஜடேஜாவின் தேவை இந்தியா அணிக்கு இருக்காது! – முன்னாள் துவக்க வீரர் சர்ச்சை கருத்து!

0
726

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இலங்கையணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டாசில் வென்ற முதலில் ஆடிய இலங்கை அணி 207 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 190 ரண்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது . இந்திய அணியின் தரப்பில் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர் .

ரவீந்திர ஜடேஜாவின் காயத்திற்கு பின் அக்சர் பட்டேல் இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.இவர் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் டேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . சென்ற வருடம் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அருமையாக டேட்டிங் ஆடி இந்திய அணியை ஜெயிக்க வைத்தார். இலங்கை அணியுடன் முதலாவது டி20 போட்டியிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார் . பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்தார் . தொடர்ந்து பேட்டிங் பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் அக்சர் பட்டேல்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர் அக்சர் பட்டேல் இதேபோன்று பேட்டில் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவிற்கு ரவீந்திர ஜடேஜாவின் தேவை இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பாக பேசி உள்ள ஜாபர் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்த பிறகு இந்தியாவிற்காக தொடர்ந்து ஆடிவரும் அக்சர் பட்டேல் பேட்டிங் பௌலிங் என சிறப்பாக செயல்பட்டு வருகிறார் . இதனால் நாம் யாரும் ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை என்பதை மறந்துவிடுகிறோம் .

கடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்ததிலிருந்து தொடர்ச்சியாக அணியில் ஆடிவரும் அக்சர் பட்டேல் இந்திய அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறார் . இந்திய அணியானது ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அவரைப் போன்றே திறமையுடைய ஒரு ஆல் ரவுண்டர் கிடைத்திருப்பது அதிர்ஷ்டமான ஒன்று என்று கூறி இருக்கிறார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி உள்ள வாசிம் ஜாபர் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நன்றாக நன்றாக டெவலப் செய்து இருக்கிறார் அக்சர் பட்டேல் . அவரது பேட்டிங் டெக்னிக் மிகவும் வலுவானதாக இருக்கிறது.பந்துகளை ஸ்லாக் செய்த ஆடாமல் நன்றாக டைம் செய்து நல்ல பேலன்ஸ் உடன் ஆடுகிறார். லோயர் மிடில் ஆர்டர் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டரிலும் ஆடுவதற்கான டெக்னிக் அவரிடம் இருக்கிறது . அந்தத் தகுதிகளை அவர் வளர்த்துக் கொண்டுள்ளார் என்று கூறியிருக்கிறார் .

- Advertisement -

பங்களாதேஷ் அணியுடன் கடைசி டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் ஆடிய விதம் மிகவும் நன்றாக இருந்தது. பந்து திரும்பக் கூடிய ஆடுகளத்தில் அவருடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் நேர்மறையான மனநிலையுடன் ஆடியது அவரை ஒரு கம்ப்ளீட் பேட்ஸ்மனாக காட்டுகிறது என்று கூறி முடித்தார் .