தென்ஆப்பிரிக்க ஒருநாள்  தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

0
4925
ICT

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் தற்பொழுது டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நடக்கிறது.

இந்த டி20 தொடர் முடிந்ததும் அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கு, டி20 உலகக் கோப்பை காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இருந்து யாரும் விளையாட மாட்டார்கள் என்று ஏற்கனவே ஒரு கருத்து இருந்தது. ஏனென்றால் இந்த தொடர் ஆரம்பிக்கும் நேரம், டி20 உலகக்கோப்பை காக இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய நேரம்.

- Advertisement -

தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருக்கிறார்.

டி-20 உலகக்கோப்பைக்காக சமீபத்தில் இடம்பெற்ற சில ஒருநாள் தொடர்களில் முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இவருக்கு பதில் ஷிகர் தவான் தான் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த தொடருக்கும் அதே நடந்துள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ;
ஷிகர் தவான் கேப்டன், ஸ்ரேயாஸ் அய்யர் துணை கேப்டன், சுப்மன் கில், ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இசான் கிசான் விக்கெட் கீப்பர், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர், சபாஸ் அகமத், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஸ் கான், மொகமத் சிராஜ், தீபக் சஹர்.

- Advertisement -