தென்ஆப்பிரிக்கா தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயத்தால் வெளியேறுகிறார்!

0
15472
ICT

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை தொடர்ந்து காயம் பெரிதாய் அச்சுறுத்தி பின்னடைவுகளை தந்து கொண்டே வருகிறது. பல முக்கியமான வீரர்கள் காயத்தால் பல முக்கியமான போட்டிகளில் விளையாட முடியாமல் போவது பெரிய பின்னடைவாக போய் தொடரை இழக்கும் அளவுக்கு மாறுகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்று தற்போதுதான் திரும்பியிருக்கிறார். t20 உலகக்கோப்பை அருகில் இருக்கும் பொழுது அணியின் துவக்க ஆட்டக்காரர் இப்படி அணியை விட்டு வெளியே இருப்பது நல்ல விஷயம் அல்ல.

- Advertisement -

இதேபோல் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்சல் படேல் இருவரும் காயத்தால் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனார்கள். அந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற முடியாமல் போனதற்கு பின்னால் இது தான் முக்கிய காரணமாக இருந்தது.

இதையடுத்து உள் நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு, டி20 உலகக்கோப்பை அணிக்கான ரிசர்வு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் கொரோனா தோற்றால் விலக, அவரது விலகல் ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இதை அடுத்து வருகின்ற புதன்கிழமை திருவனந்தபுரத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இதற்கான இந்திய அணியிலும், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரரான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா தற்போது உடலின் பின்பகுதி காயத்தால் தொடரை விட்டே வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

டி20 போட்டிகளுக்கு சுழற் பந்து வீசக்கூடிய அணியில் இடம் பெறக்கூடிய இரண்டு பந்து வீச்சாளர்களும் பேட் செய்யும் அளவில் இருப்பது மிகப்பெரிய பயன்களைத் தரும் என்பதால், பகுதி நேர ஆப் ஸ்பின் பவுலர் ஆன தீபக் ஹூடாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு, டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம் தரப்பட்டது. ஆனால் தற்போது அவரது இந்த காயத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவு எந்த அளவு இந்திய அணியை பாதிக்கும் என்று இந்த தொடர் முடிந்த பிறகுதான் தெரியும்.