டி20 உலகக்கோப்பைக்கு வாய்ப்பு கிடைக்காதவர்களை வைத்து உருவாக்கப்பட்ட வலிமையான இந்திய அணி!

0
637
ICT

அக்டோபர் மாதம் தொடங்கி ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஒரு இரண்டு மூன்று மாற்றங்கள் மூத்த வீரர்கள் மற்றும் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளானது. சில திறமைமிக்க இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு வெளியே இருக்கிறார்கள்.

டி20 உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி. கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஆர் அஸ்வின் யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா புவனேஸ்வர் குமார் ஹர்ஷல் படேல், அர்ஸ்தீப் சிங்.

- Advertisement -

இதில் ரிசர்வ் வீரர்களாக முகமது சமி, ஸ்ரேயாஸ், ரவி பிஷ்னோய், தீபக் சஹர் ஆகிய நான்கு வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத வீரர்களைக் கொண்டு, வலிமையாக உருவாக்கப்பட்ட ஒரு இந்திய பிளேயிங் லெவனைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.

இஷான் கிஷான் – ருதுராஜ்

இந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங்கில் ரைட் லெப்ட் காமினேஷன் தர இவர்கள் இருவரும் வருகிறார்கள். மேலும் இவர்கள் சர்வதேச டி20 போட்டியிலும் துவக்க வீரர்களாக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த அணியின் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் இருப்பார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் – சஞ்சு சாம்சன்

சர்வதேச டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் நம்பர் மூன்றாமிடத்தில் வருவார். இந்த அணியிலும் அவருக்கு அதே இடம். இந்த அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக மற்றும் கேப்டனாக, ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ராஜஸ்தான் அணியை கேப்டனாக இருந்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் நம்பர் நான்காமிடத்தில் வருகிறார்.

ராகுல் திரிபாதி – ராகுல் திவாட்டியா

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக பேட்டிங்கில் நம்பர் மூன்றாமிடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராகுல் திரிபாதி இந்த அணியில் பேட்டிங்கில் ஐந்தாம் இடத்தில் வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா பேட்டிங்கில் நம்பர் ஆறாமிடத்தில் ஃபினிஷிங் ரோலுக்கு இருக்கிறார்.

இந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக பேட்டிங்கும் செய்யக்கூடிய தீபக் சஹர் ஏழாம் இடத்திலும், எட்டாம் இடத்தில் முகமது சமி, ஒன்பதாவது இடத்தில் ஆவேஸ் கான் வருகிறார்கள். இந்த அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தொடர்கிறார்கள். மேலும் இந்த அணியில் 12 ஆவது வீரராக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக வேகப்பந்து வீச்சில் கலக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் இருக்கிறார்!