கிரிக்கெட்

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதற்கான காரணம்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது. தொடரை சிறப்பாக ஆரம்பித்த இந்திய அணி 3-வது டெஸ்டில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி தோல்வியுற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக 4வது டெஸ்டில் இந்திய அணி செயல்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்ததால் தற்போது இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது.

- Advertisement -

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் இந்திய அணி வீரர்கள் கருப்புநிற பட்டையை தங்களின் கரங்களில் அணிந்திருந்தது தான். தேசியப் பண் இசைக்கும் போது இந்திய வீரர்கள் இதை அணிந்திருந்தது பலருக்கு குழப்பத்தை விளைவித்தது. இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் தற்போது அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது இந்திய அணி.

இந்திய பயிற்சியாளர்களில் முக்கியமானவர் வாசுதேவ் பரஞ்சப்பே. வெறும் இருபத்தி ஒன்பது முதல்தர ஆட்டங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் அவரது பயிற்சியாளர் அவதாரம் பல முக்கிய இந்திய வீரர்களை பட்டை தீட்டி உள்ளது. கிரிக்கெட்டின் துரோணாச்சாரியார் என்று அழைக்கப்படும் இவர் பல முன்னணி வீரர்களுக்கு ஆலோசனைகளை முக்கியமான நேரங்களில் வழங்கியுள்ளார்.

1988ல் நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கியவர் இவர். மேலும் தற்போதைய இந்திய அணியின் துவக்க வீரர் ஆனார் ஓவியத்தை முதன்முதலில் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆட வைத்து அழகு பார்த்தவர் இவர் தான்.

- Advertisement -

இவ்வளவு முக்கியமான பயிற்சியாளராக விளங்கிய பரஞ்சப்பே கடந்த மாதம் 30 ஆம் தேதி இயற்கை எய்தினார். 82 வயதான இவர் இன் மரணத்தை நினைவுகூரும் வண்ணமாகவே இந்திய வீரர்கள் கருப்பு நிற பட்டை அணிந்து ஆடி வருவதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

Published by