“இந்திய மைதானங்கள்தான் சரியில்ல.. எங்க பவுலர் நல்லா தான் இருக்காங்க..!” – பாகிஸ்தான் இமாம் உல் ஹக் விசித்திரமான பேச்சு!

0
998
Imam

நேற்று முன்தினம் பெங்களூரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட மிக முக்கியமான போட்டி நடைபெற்றது.

ஆஸ்திரேலியா இந்த போட்டிக்கு முன்பாக மூன்றில் இரண்டு போட்டிகளை தோற்று இருந்தது. பாகிஸ்தான் மூன்றில் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியா டாசை இழந்து, முதலில் பேட்டிங் செய்து, பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி, 400 ரன்களுக்கு மேல் எடுக்கின்ற நிலையில் இருந்தது. இறுதியாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் சிறப்பாக செயல்பட 367 ரன்கள் மட்டும் எடுத்தது.

இதற்கடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 62 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தான் தற்பொழுது பெற்றுள்ள இரண்டு வெற்றிகளும் சிறிய அணிகளுக்கு எதிராக வந்தவை. எனவே இனி பாகிஸ்தான் பெரிய அணிகளை வென்று வந்தால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு பற்றி அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் தன்னுடைய அணியின் பந்துவீச்சாளர்களை காப்பாற்றும் நோக்கத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இமாம் பேசும் பொழுது “இங்கே பார்த்தால் அனைத்து போட்டிகளும் அதிக ஸ்கோர் கொண்ட போட்டிகளாக இருக்கின்றன. எங்கள் அணிக்கு எதிராக மட்டும் பெரிய ஸ்கோர் எடுக்கப்படவில்லை.

நேற்று இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா அண்ட் போட்டியை எடுத்துக் கொண்டால், இங்கிலாந்து பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா கிட்டத்தட்ட 400 ரன்கள் எடுத்தது. இதனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அடிக்கப்படுகிறார்கள் என்பது கிடையாது.

மேலும் இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன. ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது.

இது ஒரு காரணம் கிடையாது. ஆனால் நிலைமைகள் இப்படித்தான் இருக்கிறது. சில சமயங்களில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மைதான். நாங்கள் எப்பொழுதும் நேர்மறையாக இருக்க முயற்சி செய்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!