இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக ரியான் பராக் அறிமுகமாகி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் இழந்தார். டாஸ் வென்ற இலங்கையணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் இன்று ஆரம்பத்தில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்க இலங்கை அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் வந்தது. பதும் நிஷாங்கா 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது விக்கட்டுக்கு 92 பந்தில் சிறப்பாக 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில், பந்து வீச்சுக்கு வந்த ரியான் பராக் சிறப்பாக ஆடி வந்த அபிஷ்கா பெர்னாடோவை 96 ரன்களில் இருந்த பொழுது வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து கேப்டன் அசலங்கா 10, வெல்லாலகே 2 என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இந்த போட்டியில் கடைசி வரையில் விளையாடிய குசால் மெண்டிஸ் 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 50 ஓவர்களில் இலங்கை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ரியான் பராக் ஒன்பது ஓவர்கள் பந்துவீசி 54 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். சிராஜ், குல்தீப், அக்சர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
மூன்றாவது ஒருநாள் போட்டியின் முதல் பகுதி முடிவுக்குப் பின் பேசிய ரியான் பராக் கூறும்போது “நான் 10 முதல் 15 ரன்கள் குறைவாக கொடுத்திருக்க வேண்டும். இதில் நான் கொஞ்சம் ஏமாற்றம் அடைகிறேன். முதல் 25 ஓவர்களில் பந்து கொஞ்சம் கூட திரும்பவில்லை. இப்படியே நிலைமை நீடித்திருந்தால் 300 ரன்கள் கூட சென்றிருக்கலாம்.
இதையும் படிங்க : கம்பீர் ரோகித்கிட்ட பேசினேன் அத சொன்னாங்க.. மேட்ச் வின்னரா வருவீங்க.. ரியான் பராக்கிற்கு கோலி பாராட்டு
ஆனால் இதற்கு அடுத்து பந்து நன்றாகத் திரும்ப ஆரம்பித்தது. நாங்கள் 25 ஓவர்களுக்கு பிறகு பின்னுக்கு இழுத்தோம். ஒரு நல்ல ஸ்கோருக்கு அவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இது எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களின் பெரும் முயற்சியாகும். நான்எந்த நிலையில் பேட்டிங் செய்வேன் என்று இப்போது தெரியவில்லை. ஆறாம் இடத்தை சுற்றி ஏதாவது ஒரு இடத்தில் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.