கிரிக்கெட் விளையாடிக் கொண்டே அரசாங்க வேலையை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
2187
KL Rahul and Sachin Tendulkar

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட பின்னர் அரசாங்க வேலைக்கு செல்வார்கள். அரசாங்கம் அவர்களுக்கான வேலையை கொடுப்பது நம் முன்பு கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் ஒரு சில வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் கூறிய அரசாங்க வேலையை இந்திய அரசாங்கம் கொடுத்து உள்ளது. அப்படி கிரிக்கெட் விளையாடிக்கொண்டு அரசாங்க வேலையை பெற்ற இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்

மகேந்திர சிங் தோனி

இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தியது ஒரு தலை சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி. 28 வருடம் கழித்து இந்திய அணிக்காக உலக கோப்பையை பெற்று தந்தவர் தலை சிறந்த கேப்டன் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மேலும் டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

தோனி இந்திய பிராந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவியை வகிக்கிறார். அவரது விளையாட்டு திறமையை கண்டு இந்த பதவியை இந்திய அரசாங்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இவர் விளையாடிய போட்டிகளில், தனது கை கவசத்தை இந்திய ராணுவ சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் படி தனியாக தயாரித்து அதை பயன்படுத்தினார். அது அனைத்து இந்திய மக்களையும் பெருமிதம் கொள்ள வைத்தது.

உமேஷ் யாதவ்

டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக பந்து வீசி வரும் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. குறிப்பாக 2010 ஆம் ஆண்டுகளில் அவர் இந்திய அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசினார். பல டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறந்த பந்து வீச்சின் மூலம் இந்திய அணி வெற்றியை கண்டிருக்கிறது.

உமேஷ் யாதவ் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவர் தற்பொழுது இந்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ரசிகர்கள் அவரை ஆர்பிஐ கமர்சியல் அலுவலகத்தில் பார்த்துள்ளனர்.

ஜோகிந்தர் சர்மா

இவரை அவ்வளவு எளிதில் எந்தவித இந்திய ரசிகர்களும் மறந்துவிட மாட்டார்கள். 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை 20 ஓவர் இறுதி போட்டியில் மிக அற்புதமாக பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இவர் தற்பொழுது டெபுடி சூப்பிரண்ட் ஆப் போலீசாக ஹரியானாவில் பணியாற்றி வருகிறார். தற்பொழுது கூட அவர் டூட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கே எல் ராகுல்

சமீப காலங்களில் கேஎல் ராகுல் ஆதிக்கம் மிக அதிக அளவில் உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் வருங்கால ஒரு சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் இவர் தான் என்று தற்போது பல கிரிக்கெட் ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

இவரும் உமேஷ் யாதவும் போல இந்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக பணிபுரிந்து வருகிறார். அபெக்ஸ் பேங்க்குக்காக தற்பொழுது விளம்பர படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக ரன்கள் அடித்த ஒரே வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். அவருடைய முன் சாதனையை முழுவதுமாக இன்னும் எவராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 28 ஆண்டுகளாக இந்திய அணிக்காக பணிபுரிந்த ஒரு வீரர் இவர். அவ்வளவு எளிதில் வேறு எவராலும் இவ்வளவு காலம் கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக விளையாடி இருக்க முடியாது. சச்சின் டெண்டுல்கர் இந்திய ஏர் போர்ஸ் இல் குழு கேப்டனாக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.